பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்: இப்பூச்சி பெரியகுளம் தாலுகா, குள்ளபுரம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, நல்லகருப்பன்பட்டி, கெங்குவார்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், தமிழ் நாட்டில் மக்காச்சோளம் பயிரிடக்
கூடிய அனைத்து மாவட்டங்களிலும் இப்பூச்சி பெருத்த சேதத்தை ஏற்படுத்துகிறது.
இப்பூச்சியின் புழுக்கள் 1520 நாட்கள் வயதுள்ள இளம் நாற்றுகளிலிருந்து, பயிர் முதிர்ச்சி அடையும் வரை பயிரை
தாக்கக் கூடியது.
முட்டைகளிலிருந்து வெளி வரும் இளம் புழுக்கள் ஆரம்பத்தில் இலைகளிலுள்ள பச்சையத்தைச் சுரண்டி உண்ணும். பின்னர் அவை
தண்டைத் துளைத்து, உட்சென்று குருத்துப் பாகத்தைத் தாக்கி, திசுக்களை உண்டு, சேதத்தை விளைவிக்கின்றன.
புழுக்கள் இளம் பயிரைத் தாக்கும் போது, குருத்தழிவு அறிகுறி தோன்றும். வளர்ந்த செடிகள் தாக்கப்படும் போது புதிதாக வெளிவரும் இலை விரியும் போது, நடுநரம்பின் இருபுறமும் சமதூரத்தில் துளைகள் காணப்படும். மக்காச் சோளத்தை தவிர கம்பு, சோளம், கேழ்
வரகு போன்ற பயிர்களையும் இந்தப்பூச்சி பீடை தாக்கக்கூடியது.
பூச்சியின் வாழ்க்கைச் சரிதம்: பெண் அந்துப்பூச்சி இலைகளின் அடிப்பரப்பில், நடுநரம்பை அடுத்து முட்டைகளை குவியல்களாக இடும். ஒரு பூச்சி 200300 முட்டைகள் இடக்கூடும். அவை செதிள்களைப் போல் தட்டையாகவும், கோள வடிவிலும் இருக்கும். முட்டைகளிலிருந்து சுமார் 7 நாட்களில் வெளிவரும் இளம் புழுக்கள் தண்டைத் துளைத்துக் கொண்டு உட்செல்லும். அவை 2530 நாட்களில் முழு வளர்ச்சியடையும்.
வளர்ந்த புழுக்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலும், பழுப்புநிறத் தலையைக் கொண்டு இருக்கும். அவற்றின் உடலில் கருமைநிறப்
புள்ளிகள் காணப்படும். அவை தண்டில் துவாரம் உண்டாக்கி, அதை மெல்லிய பட்டு போன்ற இழையால் மூடி பின்னர் தண்டின் உள்ளேயே கூண்டுப்புழுவாக 710 நாட்களில் அந்துப் பூச்சியாக வெளிவரும். அந்துப்பூச்சிகள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில்
காணப்படும்.
பூச்சிக்கட்டுப்பாடு: குருத்து காய்ந்த செடிகளை உடனுக்குடன் அப்புறபடுத்தி அழித்து விட வேண்டும். விளக்குப்பொறி வைத்து அந்துப்
பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். தோட்டங்களில் களைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். டிரைக்கோகிரம்மா மற்றும் டெலினாமஸ் இனங்களைச் சேர்ந்த முட்டை ஒட்டுண்ணிகள் முட்டைகளைத் தாக்கி அழிக்கக் கூடியவை. பிரக்கான் கைனன்சிஸ் புழு
ஒட்டுண்ணிகள் புழுக்களைத் தாக்கி அழிக்கக் கூடியவை. அறுவடைக்குப் பின்னர் மக்காச் சோளத்தட்டைகளை உடனடியாக அகற்றி விட வேண்டும். புழு மற்றும் பயிர்களின் திசுக்களை துளைத்துச் செல்லும் மருந்துகளை, பரிந்துரைக்கப்பட்ட அளவு பயன்படுத்தி தெளிக்க
வேண்டும்.
முனைவர் ரா.கோபாலகிருஷ்ணன்,
க.முத்துக்குமார், வே.மோகனே
பூச்சியியல் துறை,
வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி
குள்ளபுரம், தேனி625 562.
Source : Dinamalar

No comments:
Post a Comment