ராமேஸ்வரம் :ராமேஸ்வரம் தீவில் டெங்கு, மலேரியா கொசுக்களை அழிக்கும் 'கம்பூசியா' மீன்களை சேகரித்து நீர் நிலையில் விடும் பணியில் சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மழை காலத்தில் பொதுமக்களை தாக்கும் டெங்கு, மலேரியா காய்ச்சலை தடுக்க, ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரதுறை தீவிர களபணியில் ஈடுபட்டுள்ளது. டெங்கு பரப்பும் 'ஏடிஸ்', மலேரியா பரப்பும் 'அனாபிளஸ்' கொசுக்கள் நல்ல தண்ணீர் நிறைந்த குளம், கிணற்றில், நீர் தேக்க குட்டையில் முட்டையிடும். இதில் இருந்து உருவாகும் லார்வாக்கள்(புழு), பின் கொசுவாக மாறி கொடிய காய்ச்சலை பரப்புகிறது. இந்த கொசுவின் லார்வாக்களை கிணற்றில் வாழும் 'கம்பூசியா மீன்கள்' உட்கொள்வதால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்கப்படுகிறது.
மழைகாலம் என்பதால் தற்போது உருவாகிவரும் 'ஏடிஸ்', 'அனாபிளஸ்' கொசுக்களை ஒழிக்க, ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் பவானி உமாதேவி உத்தரவுப்படி, சுகாதார களபணியாளர்கள் 50 பேர் குழுவாக பிரிந்து, ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் உள்ள குளம், கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளிலிருந்து 9,910 கம்பூசியா மீன்களை சேகரித்தனர். அவற்றை 1500 தனியார், பொது கிணறுகள், தென்னந்தோப்பு நீர் தேக்க குட்டை, குளங்களில் விட்டனர். இந்த பணியின் மூலம் ராமேஸ்வரம் தீவில் 80 சதவீதம் மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முடியும் என சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.
Source : Dinamalar

No comments:
Post a Comment