கறம்பக்கடி வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடியில்கூடுதல் மகசூல் பெறுவது எப்படி? என்பது குறித்து வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. கறம்பக்குடி பகுதிகளில் இறவை நிலக்கடலை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், அதிக மகசூல் பெறும் வழிமுறை குறித்து வேளாண் உதவி இயக்குநர் மனோகரன் ஆலோசனை வழங்கியுள்ளர். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இறவை நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் கூடுதல் மகசூல் பெற பயிர் எண்ணிக்கையை சராசரியாகப் பராமரிக்க வேண்டும். விதைக்கு விதை இடைவெளி விட வேண்டும். குறிப்பாக வரிசைக்கு வரிசை 30 செ.மீ. செடிக்குச் செடி 10.செ.மீ இடைவெளி இருக்க வேண்டும் மேலும் விதையானது 4 செ.மீ ஆழத்துக்கு கீழே செல்லக்கூடாது. விதை பருப்பை ஏக்கருக்கு 50 முதல் 55 கிலோ வரை பயன்படுத்த வேண்டும். நிலக் கடலையில் 2-ம் முறையாகக் களை எடுக்கும் போது (45 நாள்) ஒரு ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் இட்டு மண் அணைத்தால் நிலக்கடலை திரட்சியாகி மகசூல் அதிகம் கிடைக்கும். மேலும் விவரங்களை கறம்பக்குடி வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகித் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Source : Dinakaran
No comments:
Post a Comment