விவசாய பொறுப்புக் குழுவுக்கு ரூ.7.25 லட்சம் மதிப்பீட்டிலான வேளாண் கடன் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அடுத்த திருக்களம்பூரில் இயங்கி வரும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், விவசாய பொறுப்புக் குழுவினருக்கு ரூ.7.25 லட்சம் மதிப்பீட்டிலான வேளாண் கடன் வழங்கப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த சங்கத் தலைவர் ராசமாணிக்கம், 4 விவசாய பொறுப்புக் குழுவுக்கு ரூ.7.25 லட்சம் மதிப்பீட்டிலான வேளாண் கடன் வழங்கினார். இதில் சங்கச் செயலர் துரையரசன், பணியாளர்கள் பெருமாள், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Source : Dinakaran
Source : Dinakaran
No comments:
Post a Comment