தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்த வடகிழக்குப் பருவமழையால் சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களிலும் ஏற்பட்ட சேதங்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
உயிரிழப்புகளுக்கு தலா ரூ.4 லட்சம் அவர்களது குடும்பத்தினரிடமும், குடிசை வீடுகள், கான்கிரீட் வீடுகள் சேதமடைந்தால் சேதத்தின் தன்மைக்கு ஏற்ப பயனாளிகளிடம் நேரில் வழங்கப்பட்டன.இந்நிலையில் விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை நெல் மற்றும் பாசனநில பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500ம், மானவாரிப் பயிர்களுக்கு ரூ.7,410 அளிக்கப்பட உள்ளன. பயிர்ச் சேதங்கள் பற்றி வேளாண் அதிகாரிகள் வருவாய்த்துறையினரிடம் அளிக்கும் நிலப் பரப்பளவுக்கு ஏற்ப இழப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரும் நாட்களில் வரவுவைக்கப்பட உள்ளதாக பேரிடர் தகவல் மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Source : Dinakaran

No comments:
Post a Comment