Thursday, December 17, 2015

ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த மேலாண்மை பயிற்சி

திருச்சி மாவட்ட வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் நெற் பயிரில்  ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றிய 3 நாள் பயிற்சி ஆடுதுறையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். திருச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சந்திரசேகரன், துணை திட்ட இயக்குனர்கள் சரவணன், ராஜாமணி மற்றும் லால்குடி வட்டார தொழில்நுட்ப குழுவின் ஒருங்கிணைப்பாளர் மரியம் ரவி ஜெயகுமார் ஆகியோர் பயிற்சியை துவக்கி வைத்தனர். நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர்  ரவி தற்ேபாதைய சூழலில் ஒருங்கிணைந்த முறையில் நெற்பயிருக்கு ஊட்டச்சத்து நிர்வாகம், பூச்சி நோய் நிர்வாகம் செய்வதன் அவசியத்தை விளக்கி கூறினார். நிலையத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் நெல் விதை முதல் விளைச்சல் வரை நெற் பயிரின் சாகுபடி காலத்தில் பின் பற்றவேண்டிய தொழில்நுட்பங்கள் பற்றி பயிற்சியளித்தனர். பயிற்சியின் போது நிலையத்தில் பயிாிடப்பட்டுள்ள புதிய ரக மேம்பாட்டு திடல்களை நிலைய விஞ்ஞானிகள் காண்பித்து புதிய நெல் ரகங்களின் சிறப்பியல்புகளை விளக்கி கூறினர். 

Source : Dinakaran

No comments:

Post a Comment