Thursday, December 3, 2015

செயற்கை வேளாண்மையே நோய்களுக்கு காரணம்


பல்வேறு நோய்களுக்குச் செயற்கை வேளாண்மையே காரணம் என்றார் ஸ்வீடன் நாட்டின் பெராஸ் பன்னாட்டு நிறுவன தலைமைச் செயல் அலுவலர் ஜோஸ்டீயின் ஹேர்ட்வீக்.
தஞ்சாவூர் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் தாவரவியல், நுண்ணுயிரியல் துறை சார்பில் அண்மையில் நடைபெற்ற இயற்கை வேளாண்மைப் பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் அவர் பேசியது:
நம் மண்ணில் நன்மை தரும் உயிரிகளான ஆக்டினோபாக்டீரியா, வேர் பூஞ்சாணம் உள்ளிட்டவை உள்ளன. இவை அந்தந்த மண்ணுக்குத் தேவையான உரமாக இருக்கிறன. குறிப்பாக, வளிமண்டலத்தில் நைட்ரஜனை மண்ணுக்குள் ஈர்த்து தாவரத்துக்குக் கொடுக்க இந்த நன்மைத் தரும் உயிரிகள் பயனுள்ளதாக இருக்கின்றன. ரசாயன உரம் தெளிப்பதால், பயிரில் உள்ள குறிப்பிட்ட நோய் கட்டுப்படுத்தப்பட்டாலும், மண்ணில் உள்ள நன்மை தரும் உயிரிகளும் அழிகின்றன. இதனால் மண்ணில் உள்ள அமிலத்தன்மை மாறி காரத் தன்மையாக மாறிவிடுகிறது.
மேலும் புற்றுநோய், நீரிழிவு நோய், உடல் பருமன், இருதய நோய் போன்றவற்றுக்குச் செயற்கை வேளாண்மையே முக்கியக் காரணமாக இருக்கிறது.
எனவே, நன்மை தரும் உயிரிகளைப் பாதுகாக்க வேண்டும். இதன் மூலம் மண் வளம் கெட்டுப் போகாது. இயற்கை வேளாண்மையைப் போற்றி மண்ணுக்கு மீண்டும் உயிரூட்ட வேண்டும் என்றார் ஜோஸ்டீயின் ஹேர்ட்வீக்.
கல்லூரி முதல்வர் எஸ். உதயகுமார் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் கி. துளசிஅய்யா வாண்டையார், ஐ.எப்.டி.ஆர். நிறுவன சிறப்பு அலுவலர் எஸ். சேஷாத்திரி, கல்லூரி தாவரவியல், நுண்ணுயிரியல் துறைத் தலைவர் அ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Source : Dinamani

No comments:

Post a Comment