விவசாயிகளுக்கு லாபகரமான கால்நடை பண்ணையம் பயிற்சி வரும் 7ஆம் தேதி முதல் அளிக்கப்பட உள்ளதாக கரூர் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் ந. அகிலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர் மாவட்டம் பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஐஓபி வங்கியின் ஊரக தொழில்முனைவோர் பயிற்சி மையம் சார்பில் விவசாயிகளுக்கு லாகரமான கால்நடை பண்ணையம் பயிற்சி வரும் 7-ம்தேதி முதல் 12-ம்தேதி வரை நடைபெறுகிறது.
இப்பயிற்சியில் அறிவியல் ரீதியில் கறவை மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழி, பன்றி வளர்ப்பு பயிற்சிகளும், பராமரிப்பு முறைகளான இனம் தேர்வு செய்தல், பண்ணை வீட்டமைப்பு, தீவன மேலாண்மை, கால்நடை மற்றும் கோழிகளை தாக்கும் நோய்கள் மற்றும் அதனை தடுக்கும் முறைகள், மூலிகை சிகிச்சை முறைகள், விற்பனை உத்திகள், வங்கிக்கடன் உதவி, பண்ணைக்கான காப்பீடு, பண்ணைப்பொருளாதாரம், பசுந்தீவன உற்பத்தி, பதப்புடுத்துதல், கலப்பு தீவனம் தயாரித்தல், அசோலா வளர்ப்பு, தூய்மையான பால் உற்பத்தி, பால் பொருட்கள் தயாரிப்பு, மண்புழு உரம் தயாரித்தல், சாண எரிவாயு உற்பத்தி செய்தல் போன்ற தலைப்புகளில் பயிற்சி நடைபெறும்.
பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் 04324-294335 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Source : Dinamani
No comments:
Post a Comment