திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே புதுக்காமன்பட்டி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பயறுவகைகளுக்கான விதை கிராமத்திட்டப்பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், திண்டுக்கல் வேளாண்மை இணை இயக்குநர் நா.சம்பத்குமார் தலைமை வகித்தார். பச்சைமலையான்கோட்டை ஊராட்சி தலைவர் நாகலெட்சுமி முன்னிலை வகிக்தார்.
விதைச் சான்று அலுவலர் ஜெயச்சந்திரன், வேளாண்மை அலுவலர் ஆ.விஜயன், துணை வேளாண்மை அலுவலர் தண்டபாணி ஆகியோர் விவசாயிகளிடம் தொழில் நுட்பம் குறித்துப் பேசினர். பயறு வகைகளுக்கான விதை நேர்த்தி பற்றிய செயல்விளக்கத்தினை உதவி விதை அலுவலர்கள் சவரிமுத்து, பழனிச்சாமி, உதவி வேளாண்மை அலுவலர் பாண்டியம்மாள் ஆகியோர் செய்து காண்பித்தனர்.
இப்பயிற்சியில் அம்மா பண்ணை மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சார்ந்த பயறு சாகுபடி விவசாயிகள் என மொத்தம் 40 பேர் கலந்து கொண்டனர். பயிற்சி முடிவில் பயறுவகைக்கான வயலாய்வு மேற்கொள்ளப்பட்டு அசுவினி மற்றும் தத்துப்பூச்சி தாக்குதல்கள் அறியப்பட்டு அதற்கான தடுப்பு முறைகள் பற்றி விளக்கப்பட்டன. இப்பண்ணைப் பள்ளி வகுப்பிற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி மேலாளர்கள் ஜெயசுப்ரமணி, சோபியாபிரேமா ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் நிலக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் கா.முருகன் வரவேற்றார். அட்மா திட்ட மேலாளர் ஐ.சிங்கத்துரை நன்றி கூறினார்.
Source : Dinamani
No comments:
Post a Comment