சம்பங்கிப்பூ தோட்டத்தில் மாவுப்பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அலங்காநல்லூர் அருகே உள்ள தாதக்கவுண்டன்பட்டி கிராமத்தில் பூச்சி மேலாண்மைப் பயிற்சி நடைபெற்றது.
சம்பங்கி தோட்டத்தில் செடிகளின் இலைக் குருத்துக்களுக்கு இடையில் தரைமட்டத்தில் மாவுப்பூச்சிகள் அதிகம் காணப்படுகிறது. செடிகளுக்கு மண் அணைக்காத தோட்டத்தில் செடிகளின் கிழங்குகளில் மாவுப்பூச்சி கூட்டம் கூட்டமாகக் காணப்படுகிறது. இப்பூச்சியின் உடலில் இருந்துவரும் தேன்போன்ற திரவம் சொட்டுச்சொட்டாக இலைகளின் மீது படியும்.
இதனால் இலைகளில் கரும்பூஞ்சாள படலம்தோன்றும். இது அதிகம் காணப்படும்போது செடியில் குருத்து அழுகி கருகிவிடும். அப்போது எறும்புகளின் நடமாட்டம் அதிகம் காணப்படும். எறும்பின் மூலம் மாவுப்பூச்சி தோட்டம் முழுவதும் பரவுகிறது. இதனையும் பிற பூச்சி இனங்களையும் ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்துவது தொடர்பான சிறப்பு பயிற்சி நடைபெற்றது.
மதுரை வேளாண். அறிவியல் மையத் தலைவர் இரா.வீரபுத்திரன், சம்பங்கித் தோட்டத்தின் உழவியல் தொழில் நுட்பங்கள், நீர், களை நிர்வாகம் குறித்து விளக்கம் அளித்தார். முனைவர் அருண்குமார் சாகுபடி தொழில்நுட்பங்களை விளக்கினார். பூச்சயில்துறை பேராசிரியர் ஜெ.ஜெயராஜ், உதவிப்பேராசிரியை உஷாராணி ஆகியோர் சம்பங்கிப்பூவைத் தாக்கும் பூச்சிகளை, இயற்கைமுறையில் கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் 3 சதம், வேப்பங்கொட்டை 5 சதம் தயாரிப்பை செயல்விளக்கம் முலம் அளித்தனர்.
வேளாண்துறை அலுவலர்கள், கல்லூரி மாணவியரும் ஏராளமான விவசாயிகளும் இதில் கலந்துகொண்டனர்.
Source : Dhinamani
No comments:
Post a Comment