கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி., அணை பகுதியில் அமைந்துள்ள இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், இலவச காளான் வளர்ப்பு மற்றும் இலகு ரக வாகன ஓட்டுனர் பயிற்சியில் சேர விரும்புவோர், வரும், 28 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து பயிற்சி நிறுவன இயக்குனர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி அடுத்த கே.ஆர்.பி., அணை பகுதியில் அமைந்துள்ள, இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், சுய தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு, சான்றிதழுடன் கூடிய தொழில் முனைவோர் பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 18 வயது முதல், 45 வயது வரையுள்ள, தமிழில் எழுத படிக்க தெரிந்த ஆண்கள், பெண்கள் பயிற்சியில் சேரலாம். சுய உதவிக்குழுக்கள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பயிற்சியில் சேர முன்னுரிமை வழங்கப்படும். இந்நிறுவனத்தில் தற்போது இலவச காளான் வளர்ப்பு மற்றும் இருசக்கர வாகன பழுது நீக்கம், இலகு ரக வாகன ஓட்டுனர் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், வரும், 28 ம் தேதிக்குள், 'இயக்குனர், இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கே.ஆர்.பி., டேம், கிருஷ்ணகிரி' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடித்தவர்களுக்கு தொழில் துவங்க வழிகாட்டுதல், திறன் மேம்படுத்தும் பயிற்சி இரண்டு ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Dinamalar
No comments:
Post a Comment