பெரம்பலூர் ஆட்சியரகக் கூட்டரங்கில் டிச. 23 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் டிச. 23 காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், வேளாண் சம்பந்தமான நீர்பாசனம், கடனுதவிகள், இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும். எனவே, இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரமுகர்கள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம்.
Source : Dinamani
No comments:
Post a Comment