விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். ஒரு நாட்டுக்கு முதுகெலும்பே விவசாயிதான். விவசாயத்தை மேம்படுத்தினால்தான் நாடு முன்னேறும். விவசாயத்தை வளப்படுத்த, விவசாயியை வாழ வைக்கும் திட்டங்களை உருவாக்க வேண்டியது நல்ல அரசின் கடமை.
தமிழகத்தை பொறுத்தவரை தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என புகழப்பட்ட காவிரி டெல்டா பகுதியில் கடந்த ஐந்தாண்டு கால அதிமுக அரசின் அலட்சியப்போக்கால் இருபோக விளைச்சல் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் வறுமையில் வாடி, வாங்கிய கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலை அதிகரித்து வருகிறது. விவசாயிகளின் வாட்டத்ைத போக்க, விவசாயத்தை மேம்படுத்த அற்புதமான திட்டத்தை திமுக தனது தேர்தல் அறிக்கையில் வைத்துள்ளது. விவசாயத்துக்கு என்றே தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்ற அறிவிப்பு பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்ததுபோல் இருக்கிறது.
மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் 10,000 கோடியில் ஏரி, குளங்கள், நீர்நிலைகள் தூர்வாரி பராமரிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகபட்சம் 35 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் பாதுகாக்கப்படும். நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து கிணற்று பாசன விவசாயிகளும் பயனடைவர். தமிழக ஆறுகளின் குறுக்கே முதல்கட்டமாக 2,000 கோடியில் 200 தடுப்பணைகள் கட்டப்படும் என்ற அறிவிப்பு விவசாயத்தையே நம்பி வாழும் மாவட்ட மக்களின் வயிற்றில் பால் வார்ப்பதுபோல உள்ளது. இதன் மூலம் அதிக பட்சம் 200 டிஎம்சி தண்ணீரை தேக்க முடியும் என்று பொறியாளர்கள் திட்டவட்டமாக கூறுகின்றனர்.
அப்படிப்பார்த்தால் ஐந்தாண்டு நிறைவில் ஏரி, குளங்கள் மற்றும் தடுப்பணைகள் மூலம் தமிழகத்தில் 55 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வாய்ப்பு ஏற்படும்ஆங்கிலேய பொறியாளர் பென்னிக்குக் கட்டிய முல்லைப்பெரியாறு மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 2.50 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேற்கு நோக்கி பாய்ந்த தண்ணீரை கிழக்கு நோக்கி திருப்பிவிட்டு வறட்சியையும், வறுமையும் விரட்டிய பென்னிகுக்கை மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்கள் குலசாமியாக வணங்குகின்றனர். திமுகவின் தேர்தல் அறிக்கையில் உருவாக்கப்பட்டுள்ள திட்டத்தின்படி 55 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் தமிழக விவசாயிகள், இந்த சூப்பர் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதியை இரண்டாம் பென்னிக்குக்காகவே கருதுகிறார்கள்.
விவசாய கடன் தள்ளுபடி, தொடர்ந்து இலவச மின்சாரம், விண்ணப்பித்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் மின் இணைப்பு, பம்ப்ஷெட்களுக்கு மும்முனை மின்சாரம் என எல்லாமே முத்தான அறிவிப்புகள் என்றும் இதனால் விவசாயம் தழைக்கும் என்றும் விவசாயிகள் போற்றுகிறார்கள்.
source : Dinakaran

No comments:
Post a Comment