தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், பாபநாசம், திருப்பனந்தாள் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்தி மறைமுக ஏலம் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூர் விற்பனைக் குழுச்செயலர் மு. ரவி தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் விற்பனைக் குழுவுக்குள்பட்ட கும்பகோணம், பாபநாசம், திருப்பனந்தாள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் நிகழாண்டு பருத்தி மறைமுக ஏலம் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கப்படவுள்ளது. இந்த ஏலத்தின்போது பருத்தி கொள்முதல் செய்ய உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே, பருத்தி விவசாயிகள் தங்களது விளைபொருளை நன்கு நிழலில் உலர வைத்து, தூய்மை செய்து அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்குக் கொண்டு சென்று நல்ல விலைக்கு விற்பனை செய்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு கும்பகோணம், பாபநாசம், திருப்பனந்தாள் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடப் பொறுப்பாளர்களை அணுகலாம்.
Source : Dinamani
No comments:
Post a Comment