விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்தில் கரும்பு விவசாயிகள் பலன் அடையும் வகையில் கரும்பு சோகைகளை மக்கச்செய்யும் புதிய நுண்ணுயிர் கூட்டுக்கலவை அறிமுகம் செய்து அதற்கான செயல்விளக்க பயிற்சி தியாகதுருகம் அருகே வடதொரசலூரில் விவசாயிகளின் வயலுக்கு சென்று அதிகாரிகள் செய்து காட்டினர்.
தலைமை வேளாண்மை இணை இயக்குனர் ரவி தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குனர் கனகசபை, நீர்வள மேம்பாட்டு உதவி இயக்குனர் கோவிந்தன், வேளாண்மை அதிகாரி சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குனர் ராமச்சந்திரன் வரவேற்றார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானி சுப்ரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில்,
விவசாய நிலங்களில் உள்ள கழிவுகளை (இலைகள், கரும்பு சோகை, தழை) அந்த மண்ணிலேயே குறுகிய காலத்தில் மட்கவைத்து உரமாக்குவதற்கு இந்த நுண்ணுயிர் கூட்டுக்கலவை பயன்படுகிறது. ஒரு ஏக்கர் கரும்பு வயலுக்கு 10 கிலோ போதும். இக்கலவையை 20 கிலோவிற்கு 40 லிட்டர் நீர் கலந்து தெளித்தால் போதும், நிலம் ஈரப்பதத்துடன் இருப்பது முக்கியம். 60 நாட்களில் முழுவதுமாக கரும்பு தோகைகள் மக்கிவிடும். இது மண்ணுக்கு சிறந்த சத்தாகும். மண் பரிசோதனை செய்து அதற்கேற்றவாறு பயிரிடவேண்டும்.
பயிர்களை தாக்கும் நோய்களை விவசாய அதிகாரிகளிடம் காட்டி அவர்கள் கூறும் ஆலோசனைப்படி மருந்துகளை தெளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினர்.
வேளாண்மை அலுவலர்கள் நித்யா, பொன்னுராசன், தனியார் சர்க்கரை ஆலை அலுவலர் திருமூர்த்தி, உதவி வேளாண்மை அலுவலர்கள் பழனிசாமி, சேகர், கோபால், வெங்கடேசன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். உதவி வேளாண்மை அலுவலர் ஞானவேல் நன்றி கூறினார்.
Source : Dinakaran

No comments:
Post a Comment