மலர் கண்காட்சியில் ஒரு லட்சம் மலர்களை கொண்ட சென்னை சென்டரல் ரயில் நிலையத்தின் முகப்பு தோற்றம், கொய்மலர்களை கொண்டு சிட்டுக்குருவி மற்றும் நுழைவு வாயில்களில் கொய்மலர்களால் ஆன அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 27ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை மூன்று நாட்கள் 120வது மலர் காட்சி நடக்கிறது. மலர் காட்சியை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகைகளை கொண்ட 4 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இன்கா மேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயான்தஸ், பெகோனியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ், வயோலா, அஜிரேட்டம், கேலண்டுலா, கிளாடியோலஸ், லலில்லியம், சன்பிளவர், சப்னேரியா போன்றவை பூங்காவில் பல்வேறு பகுதிகளில் மலர் பாத்திகளில் நடவு செய்யப்பட்டு பொலிவுடன் பார்வையாளர்களை கவர்ந்த வருகிறது.
15 ஆயிரம் தொட்டிகள் மலர் கண்காட்சி மாடத்தில் பார்வையாளர்களை கவரும் வகையில் அலங்கரித்து வைக்கப்படவுள்ளது. மேலும், 6 ஆயிரம் தொட்டிகள் புது பூங்காவில் அலங்காரங்கள் செய்யப்படவுள்ளது. இம்முறை 120வது மலர் காட்சியை முன்னிட்டு பல வண்ணங்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கார்னேசன் மலர்களை கொண்டு 68 அடி நீளம் 30 அடி உயரம், 10 அடி அகலம் கொண்ட சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முகப்பு தோற்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கார்னேசன் மலர்களை கொண்டு 10 அடி நீளம், 4 அடி அகலம், 6 அடி உயரம் கொண்ட சிட்டுக் குருவியின் உருவம் அமைக்கப்படவுள்ளது. பல ஆயிரம் கொய் மலர்களை கொண்டு 5 நுழைவு வாயிலும், ஆர்கிட் மலர்களை கொண்டு 5 அலங்கார வளைவுகள் உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
இது தவிர மலர்களை கொண்டு பல்வேறு ரங்கோலி அமைக்கப்படுகிறது. மேலும், தோட்டக்கலைத்துறையினர் வளத்தை சித்தரிக்கும் வகையில் தோட்டக்கலை அரங்கு அமைக்கப்பட்டு மலர்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முக்கிய கண்காட்சி பொருட்கள் கொண்டு வரப்பட்டு காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. நெதர்லாந்து நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட டூலிப் மலர் அலங்காரமும் செய்யப்படுகிறது. மேலும், மூன்று நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. அரசுத்துறை அரங்குகள் போட்டியாளர் அரங்கும் அமைக்கப்படும். இந்த ஆண்டின் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பூங்காக்களை அமைத்து போட்டிக்காக பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு சிறந்த பூங்காவிற்கான சுழற்கோப்பை வழங்கப்படவுள்ளது.
Source : Dinakaran

No comments:
Post a Comment