திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்களது வீடுகளில் அனல் மற்றும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க வீடுகளில் காய்கறி தோட்டம் அமைக்கலாம் என தோட்டக் கலைத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்ததையடுத்து ஆண்டுதோறும் பூமியில் சூரிய வெப்பம் அதிகரித்து வருகிறது. மேலும் வாயுமண்டலமும் மாசடைந்து வருகிறது. இதையொட்டி அதிகளவில் மரக்கன்றுகளை நட்டுவைத்து பூமியின் உஷ்னத்தை குறைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில் தலைவர்கள் பிறந்தநாளில் மரக்கன்று நடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது வீடுகளில் அதிகரித்து வரும் கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றை தடுக்க வசதியுள்ள மாதிகளில் மாடி காய்கறி தோட்டம் அமைக்கலாம் என தோட்டக்கலைத் துறையினர் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ், திட்டக் குழு கூட்டத்தின் போது இ்மாவட்டத்தில் இட வசதியுள்ள மாடிகளில் தோட்டக்கலைத் துறை சார்பில் இட வசதி உள்ள வீடுகளில் காய்கறி தோட்டம் அமைக்க மக்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் பொதுமக்கள் வெப்பத்தில் இருந்து தப்பிக்கவும், வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை எடுத்துக் கொள்ளவும் ஏதுவாக இருக்கும் என தோட்டக் கலைத்துறையினர் கூறினர்.
source : Dinamani
No comments:
Post a Comment