Friday, May 20, 2016

மே 23இல் மஞ்சள் சாகுபடியில் தொழில்நுட்ப இலவச பயிற்சி


நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 23ஆம் தேதி மஞ்சள் சாகுபடியில் தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது என வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் என்.அகிலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மஞ்சள் சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சியில் மஞ்சளில் புதிய மேம்படுத்தப்பட்ட ரகங்கள், அதன் சிறப்பியல்பு, விதை நேர்த்தி, நடவு முறை, உர மேலாண்மை, நீர்ப்பாசனம், கள நிர்வாகம் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சியில் விவசாயிகள், கிராமப்புறப் பெண்கள், இளைஞர்கள் உள்பட ஆர்வமுள்ளோர் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பமுள்ளோர் வரும் 21ஆம் தேதிக்குள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 04286-266345, 266650 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ பெயர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Source : Dinamani

No comments:

Post a Comment