மகளிர் விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் தொடக்க விழா கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கத்தில் உள்ள தேசிய வேளாண் நிறுவன அலுவலகத்தில் தொடங்கப்பட்டது.
விழாவுக்கு மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் கிருஷ்ணம்மாள் தலைமை வகித்தார். தேசிய வேளாண் நிறுவன இயக்குநர் எஸ்.முருகன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து மகளிர் சமூக வள ஒருங்கிணைப்பாளர்கள் 26 பேருக்கு விவசாயத்தை மேம்படுத்துவது குறித்தும், நவீன விவசாய முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை தேசிய வேளாண் நிறுவனத்தைச் சேர்ந்த திட்ட ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரன், வார்டு உறுப்பினர் மூர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Source : Dinamani

No comments:
Post a Comment