கர்நாடக மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் கூடலூரைச் சுற்றியுள்ள கேரள மற்றும் கர்நாடக மாநில எல்லைகளில் வாகனங்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து தெளிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கூடலூர் பகுதி கேரளம், கர்நாடக மாநில எல்லைகளில் அமைந்துள்ளது. கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக கிடைத்த தகவலையடுத்து, கர்நாடக மாநிலத்தின் நுழைவுவாயிலான கக்கநல்லா சோதனைச் சாவடி, வயநாடு மாவட்டத்தின் எல்லைகளான பாட்டவயல், அம்பலமூலா, நம்பியார்குன்னு, கக்குண்டி, சோலாடி, மலப்புரம் மாவட்ட எல்லையான கீழ் நாடுகாணி ஆகிய பகுதிகளில் வெளி மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.
கால்நடை பராமரிப்புத் துறையினர் சோதனை செய்து நோய்த் தடுப்பு மருந்துகளை தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதையில் கிருமி நாசினிகளை பரப்பிவிட்டு அதன் மீது வாகனங்களை நகர்த்தி சோதனை செய்த பிறகே தமிழகத்துக்குள் வாகனங்களை அனுமதிக்கின்றனர்.
Source : Dinamani
No comments:
Post a Comment