ஆதிரெங்கம் இயற்கை வேளாண் பண்ணையில் வரும் ஜூன் 4, 5 தேதிகளில் தேசிய நெல் திருவிழா நடக்கிறது.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு ஆதிரெங்கம் இயற்கை வேளாண் பண்ணையில் கடந்த 2006ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலான நெல் திருவிழா நடந்து வருகிறது. இதை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தொடங்கி வைத்து நடந்து வருகிறது.
10ம் ஆண்டு தேசிய அளவிலான நெல் திருவிழா வருகிற ஜூன் 4, 5ம் தேதிகளில் நடக்கிறது. காந்தி கிராம பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மார்க்கண்டன் தலைமை வகிக்கிறார். கிரியேட் சேர்மேன் துரைசிங்கம், மேலாண் அறங்காவலர் பொன்னம்பலம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
விழாவில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த முன்னணி வேளாண் வல்லுநர்கள், உழவர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் நபார்டு உழவர் மன்ற உறுப்பினர்கள், புதுவாழ்வு திட்ட உறுப்பினர்கள், வேளாண்மைத் துறையின் அட்மா திட்ட உறுப்பினர்கள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
கருத்தரங்கில் உழவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள், சவால்கள், நிலங்களையும், நீர்நிலைகளையும் பாதுகாத்தல், உற்பத்தியாளர் கம்பெனியை தொடங்க வேண்டியதன் அவசியம், பாரம்பரிய நெல் சாகுபடி, உழவர்களுக்கான நபார்டு திட்டங்கள், இயற்கை உழவர் வேளாண் சான்று பெறும் முறை, வேளாண்மையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டுள்ள உழவர்கள், சமூக ஆர்வலர்களுக்கு நம்மாழ்வார் விருது வழங்குதல், உழவர்களின் அனுபவ பகிர்வுகள் ஆகியன இடம்பெற உள்ளன.
மேலும் விழாவில் இயற்கைச் சீற்றங்களை தாங்கி வளரும் 156 பாரம்பரிய நெல் வகைகள் ஐந்தாயிரம் உழவர்களுக்கு தலா 2 கிலோ வீதம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. பங்கேற்க விரும்புவோர் நெல்ஜெயராமன் நமது நெல்லைக் காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் பெருமாள் கோயில் தெரு ஆதிரெங்கம் கட்டிமேடு 614716 திருத்துறைப்பூண்டி வட்டம் என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் பதிவு செய்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு 9443320954, 9487830954, 04369-220954 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை நமது நெல்லை காப்போம் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
source : Dinakaran

No comments:
Post a Comment