Friday, May 27, 2016

விவசாயிகள் சங்க மாநில மாநாடு


தாராபுரத்தில் விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாட்டை நடத்துவது என நேற்று நடந்த மாநில நிர்வாககுழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் நேற்று காலை தாராபுரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் காளிமுத்து தலைமை வகித்தார். சந்திரசேகரன், சுப்பிரமணியன், அவினாசி முத்துச்சாமிகவுண்டர் உட்பட பலர் சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சங்கத்தின் நிறுவனராக இருந்து விவசாயிகளின் உரிமைகளுக்கு குரல் கொடுத்த, மறைந்த தலைவர் பழனிச்சாமிக்கு இரங்கல் தெரிவிப்பது. கடந்த, 1976ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் மரணம் அடைந்த, 40 விவசாயிகளின் குடும்பங்களுக்கு, ஐந்து லட்சம் நிவாரணம் வழங்கியதற்கு நன்றி. அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற நிதி ஒதுக்கி ஆணை பிறப்பித்ததற்கு நன்றி. விவசாயிகளின் பயிர் கடன்களை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றி. வரும் ஜுலை மாதம், 5ம் தேதி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாடு மற்றும் பேரணியை தாராபுரத்தில் சிறப்பாக நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தமிழக சட்ட விழிப்புணர்வு இயக்க தலைவர் செல்வராஜ், கோவை மாவட்ட நிர்வாகி பாபு, திருப்பூர் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Source : Dinamalar

No comments:

Post a Comment