நீடாமங்கலத்திலிருந்து சேலத்துக்கு 1,100 டன் சன்னரக அரிசி பொது விநியோகத் திட்டத்துக்காக வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
பாமணி மத்திய சேமிப்புக் கிடங்கு, சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை ஆகியவற்றிலிருந்து 88 லாரிகளில் 1,100 டன் சன்னரக அரிசி மூட்டைகள் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டன. 80 சுமை தூக்கும் தொழிலாளர்கள் அரிசி மூட்டைகளை சரக்கு ரயிலின் 22 பெட்டிகளில் ஏற்றினர். இதைத்தொடர்ந்து, அரிசி மூட்டைகள் சரக்கு ரயிலில் பொது விநியோகத் திட்டத்துக்காக சேலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்பணிகள் நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
source : Dinamani
No comments:
Post a Comment