வரும் 24 ஆம் தேதி "கோடை காலத்தில் கறவை மாடுகள் பராமரிப்பு' என்ற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது என வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் என்.அகிலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 24ஆம் தேதி காலை 9 மணிக்கு கோடை காலத்தில் கறவை மாடுகள் பராமரிப்பு என்ற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.
இப் பயிற்சியில் கறவை மாடுகள் இனங்கள், இனவிருத்தி முறைகள், தீவன முறைகள், கோடை காலத்தில் கறவை மாடுகளைப் பராமரிக்கும் முறைகள், சினைமாடுகள் பராமரிப்பு, நோய்த் தடுப்பு முறைகள், தடுப்பூசி அளிக்கும் முறைகள் மற்றும் கன்றுகளைப் பராமரிக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கப்படுகிறது. இதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள், கால்நடை மருத்துவக் கல்லுôரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்படும், வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ வரும் 23ஆம் தேதிக்குள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
source : Dinamani
No comments:
Post a Comment