குன்னுார்: குன்னுார் தேயிலை ஏலத்தில், 95 சதவீதம் விற்பனையானது.
குன்னுாரில் உள்ள ஏல மையத்தில் விற்பனை எண், 19க்காக நடந்த ஏலத்தில், எட்டு லட்சம் கிலோ தேயிலை துாள் இடம் பெற்றது. இதில், இலை ரகம்,5 லட்சத்து 4 ஆயிரம் கிலோவும்; டஸ்ட் ரகம், 2 லட்சத்து, 96 ஆயிரம் கிலோவும் இருந்தது. 95 சதவீதம் விற்பனையானது. சி.டி.சி., ரகத்தில், உயர்ந்தபட்ச விலையாக, தேயிலை துாள் கிலோ, 278 ரூபாய்; ஆர்தோடெக்ஸ் ரகத்துக்கு, 255 ரூபாய் கிடைத்தது.
சராசரி விலையாக, இலை ரகத்தில் சாதாரண வகை, 79 ரூபாய் முதல், 82 ரூபாய் வரையிலும்; தரமான தேயிலை துாள், 132 ரூபாயில் இருந்து, 135 ரூபாய் வரையிலும் ஏலம் போனது. டஸ்ட் ரகத்தின் சாதாரண வகை, 93 ரூபாயில் இருந்து, 95 ரூபாய் வரையிலும், தரமான தேயிலை துாள், 110 லிருந்து, 160 ரூபாய் வரையிலும் ஏலம் விடப்பட்டது.
Source : Dinamalar
No comments:
Post a Comment