கூடலுாரில் நாவல் பழ சீசன் துவங்கியுள்ளது.
கூடலுார் வனப்பகுதியில் இயற்கையாக விளையும் மூலிகை செடிகள், பழங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. அதில், மருத்துவ குணம் கொண்ட, நாவல் பழ சீசன் தற்போது துவங்கி உள்ளது. உள்ளூர் மக்கள் இதனை விரும்பி உண்டு வருகின்றனர்.
கடைகளில் விற்பனை செய்யப்படும், இந்த பழங்களை சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். சித்தா மருத்துவர்கள் கூறுகையில் 'இரும்பு சத்து நிறைந்துள்ள நாவல் பழத்தை உண்பதன் மூலம், ரத்த ஓட்டம் சீராகும். இதன் பட்டையை காய வைத்து, பொடியாக்கி பயன்படுத்தினால் வயிற்றில் ஏற்படும்
நோய் கிருமிகள் அழியும்; ரத்தசோகை நோயும் மாறும். இதனை மனிதர்கள் விரும்பி உண்டாலும், வன உயிரினங்களுக்காகவும் அதனை வனப்பகுதியில் விட வேண்டும். முழுமையாக அவற்றை பறிக்க கூடாது ' என்றனர்.
Source : Dinamalar
No comments:
Post a Comment