வாழப்பாடி அருகே, ஜெர்சி பசு, இரு கன்றுகளை ஈன்றது. வாழப்பாடி அடுத்த மாரியம்மன்புதூரை சேர்ந்தவர் ஜெயராமன், 40. விவசாயியான அவர், கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். சில நாட்களுக்கு முன், ஈரோடு மாவட்டத்தில் இருந்து, ஜெர்சி ரக பசு வாங்கி வந்தார். நிறைமாத கர்ப்பமாக இருந்த, அந்த பசு, நேற்று இரவு, ஒரு காளை, ஒரு கடேரி(பெண்) என, இரு கன்றுகளை ஈன்றன. குறிப்பாக, ஆயிரத்தில் ஒரு பசு மட்டுமே, இரு கன்றுகளை ஈனும். அதுவும், ஆண் அல்லது பெண் என, ஒரே இன கன்றுகளை மட்டுமே ஈனும். ஜெயராமன் வளர்த்த பசு, ஒரு ஆண், ஒரு பெண் என ஈன்றுள்ளது. கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், 'இருவேறு பாலின கன்றுகள் கருத்தரிக்கும்போது, பசுவின் ஹார்மோன் சுரப்பியில் பிரச்னை ஏற்படும் என்பதால், பெண் கன்று மலட்டு தன்மையுடன் வளர வாய்ப்புள்ளது' என்றனர்.
Source : dinamalar
Source : dinamalar
No comments:
Post a Comment