தமிழகத்தில் திராட்சை சாகுபடி பரப்பு சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. பழைய ரகங்கள், மகசூல் குறைவு போன்றவற்றால் விவசாயிகள் பாதிக்கின்றனர்.
எனவே விவசாயிகளுக்கு ஏற்றுமதி ரகம் மற்றும் ஒயின் ரகங்களை சாகுபடி செய்ய ஆராய்ச்சி நிலையம் ஊக்குவித்து வருகிறது. ஆனால் அதற்கான வாய்ப்புக்கள் குறைவாக இருக்கிறது.
வர்த்தக ரீதியில் நல்ல விளைச்சல் தரக்கூடிய மாணிக் சாமன், ரெட்குளோப், சரத்சீட்லெஸ், கிருஷ்ணாசீட்லெஸ், மெடிக்கா, ஏ 18-3 போன்ற ரகங்களை சாகுபடி செய்ய விரும்பினாலும், அதற்கான குச்சிகள் கிடைப்பதில் பிரச்னைகள் உள்ளது. எனவே இந்த ரக குச்சிகளை தாய் குணம் மாறாமல் மரபு வழி பெருக்கம் மற்றும் உற்பத்தி செய்ய ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையத்தில் 2 ஏக்கர் பரப்பில்'மதர் நர்சரி' அமைக்கப்பட்டது.
ஆராய்ச்சிநிலைய தலைவர் பார்த்திபன், உதவி பேராசிரியர் சுப்பையா கூறுகையில், “உயர் விளைச்சல் தரக்கூடிய 125 ரகங்களை புனே மற்றும் ஐதராபாத்தில் உள்ள தேசிய திராட்சை ஆராய்ச்சிநிலையங்களில் இருந்து வாங்கி, நமது ஆராய்ச்சி நிலையத்தில் கிராப்ட் (குளோனிங்) செய்துள்ளோம். தாய் குணம் மாறாமலும், மரபு வழியிலும் இந்த ரகங்கள் இருக்கும்.
இதற்கென பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு அந்த ரகங்களின் குச்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்,” என்றனர்.---
Source : Dinamalar
No comments:
Post a Comment