Tuesday, May 31, 2016

Mango mela to begin today

According to officials of the Karnataka State Mango Development and Marketing Corporation, diabetics and mango addicts have to wait for just two more weeks for the right-sized Totapuri mango to arrive in the market. However, if you can’t wait that long to catch a glimpse of this variety, head to the mango and jackfruit mela, which will begin in the city on Tuesday.
“It (this variety of mango) has a scientifically tested low glycemic index, and Karnataka leads in Totapuri cultivation with a yield of nearly three-lakh tonnes … it will arrive in mid-June,” says the chairperson of the corporation, Kamalakshi Rajanna. The Totapuri will be one of the nearly 80 mango varieties that will be displayed at the month-long mela, which will be inaugurated by Chief Minister Siddaramaiah. The mela will be on till June 29.
The mela will happen simultaneously in seven centres in the city — Lalbagh; Elements Mall, Thanisandra Main Road; Malleswaram Playground; Majestic Bus Stand; Shantinagar BMTC; and Jayanagar BMTC and Kengeri BMTC stands.
Mango cultivation, apparently, has increased steadily over the last three years. “This year, farmers have assured us of 14-lakh tonnes of mangoes … it was 8-lakh tonnes last year. This is clearly a big jump. This has been the trend for the last three years,” says Ms. Rajanna.

For the attention of fruit lovers
  • This year’s mango and jackfruit mela will be held from May 31 to June 29
  • Chief Minister Siddaramaiah will inaugurate the mela at Lalbagh at 11 a.m. on May 31
  • Mela to be held simultaneously in seven centres — Lalbagh; Elements Mall, Thanisandra Main Road; Malleswaram Playground; Majestic Bus Stand; Shantinagar BMTC; Jayanagar BMTC and Kengeri BMTC bus stands
  • Nearly 1,200 tonnes of mangoes will be available
  • 80 mango varieties grown in Karnataka to be on display (20 varieties will be for sale in 100 stalls)
  • Alphonso, Badami, Mallika, Raspuri, Sendura, Dasheri, Kesar, Neelam and Malgova to be on sale
  • Locally-grown varieties— Sakkare Guthi, Gunda, Appe Midi, Jwaari, Chinna Rasam, Pedda Rasam— to be on display
  • 10 varieties of jackfruit and allied products will be on display in 20 stalls

    Source : The Hindu 
  • Monday, May 30, 2016

    Five easy ways to go green without actively changing your lifestyle


     
    If the planet stays healthy, you stay healthy. Which makes World Environment Day on June 5 more significant than a reminder that each passing moment is adding to the irreversible damage inflicted to the earth, water and air around us. Increasing consumption has led to an 11-fold growth to our collective carbon footprint -- define as the greenhouse gases generated by how we live our life -- since 1961, which now accounts for 54% of humanity’s overall ecological footprint.
    Sure, governments need to adopt green policies to cap emissions produced by the expanding need and greed of increasing populations, but till polity gets it right, each of us can do our bit to lower our own carbon footprint to give life on Earth a breather.
    In a run-up to World Environment Day, here are five easy ways to go green without actively changing your lifestyle. If the planet stays healthy, you stay healthy.
    Eat fresh food
    Imported and packaged foods that have become symbols of globalisation add more than half of the 100,000 tonnes of plastic waste dumped in oceans each year. Apart from the fuel spent in transporting foods from one end of the world to another, chemicals in polythene, packaging and wraps for imported fruit and foods such as chips and biscuits, not only kill marine life but also disrupt the human endocrine system to trigger hormone-related diseases, including cancers. Eating fresh, unpackaged food that is locally produced improves health while lowering your carbon footprint .
    Use phones, laptop efficiently
    Postpone upgrading your smartphone. On an average, people replace their phones every two years. Greenhouse gas emissions from charging smartphones are expected to double from the current 6.4 megatons to 13 megatons -- equivalent to emissions of 1.1 million cars -- by 2020, estimates a study by Juniper Research.
    Add to this mobile phone battery contamination -- each discarded mobile battery contains enough cadmium to contaminate 600,000 litres of water -- and non-degradable plastic covers filling landfills and each discarded phone becomes an ecological nightmare. Till manufacturers make their phones more energy efficient, delay swapping your phone for a newer model.
    Turn off the computer or laptop monitor when you have finished working. You can laser print 800 pages with the energy you waste by leaving on a computer monitor overnight. The money saved on electricity bills will be a bonus.
    Commute smartly
    There are over one billion vehicles on the world’s roads today, of which close to 200 million are registered for use in India. Of these, 24.9 million are cars, taxis and jeeps used by people like us to commute.
    Smooth and efficient driving, where you don’t speed, accelerate rapidly, brake hard and switch off the engine at a red light, can raise mileage by up to 33%. Idling at a light alone can use up roughly half a litre of petrol an hour, spending on your engine size and air-conditioner use.
    Since public transport is mostly unreliable -- Delhi and Kolkata are the only two of India’s 53 cities with a population of more one million to have metro tracks of more than 100 km and 28 km respectively, compared to Shanghai’s over 500 km of rail network -- opt for bikes and shared transport, whenever possible.
    Work efficiently
    Each year, most of us throw away two trees worth of paper. Reduce the amount of paper you use by avoiding unnecessary printing, using both sides of a paper while printing a document and using recycled paper. Although paper is biodegradable, waster paper releases the greenhouse gas methane during decomposition. Each tonne of recycled paper helps save 17 trees, more than 4,000 kilowatt of energy, 26,000 litres of water, and lower air pollution by 74% compared to paper made from virgin pulp.
    Replace burned-out bulbs with compact florescent lamps (CFLS) and light-emitting diodes (LEDS) that use less power per unit of light generated to use less electricity. LEDs also help reduce greenhouse gas emissions from power plants.

    Save water, go natural
    A dripping tap can waste up to 10 litres of water a day and a running tap five litres per minute. Get dripping taps fixed and don’t leave the tap running when brushing your teeth or shaving. When you have the option, don’t use piped, drinking water to clean your home, hose cars or water the garden.
    Avoid synthetic chemical cleaning products, use hot water instead. Triclosan, the antimicrobial and anti-fungal agent found in many shampoos, soaps, deodorants, toothpaste, and toys, among others, contaminates 58% freshwater streams in the US from where it can get absorbed through the skin to disrupt hormone function and colonies of healthy bacteria in the gut that aid digestion.

    Source : Hindhusthan Times

    Alarm over antibiotics in meat, shrimp

    Alarm over meds in meat, shrimp (Getty Images)


    Leading American health experts on Wednesday raised concerns about the increasing use of antibiotics in fish and animal farms to accelerate growth. They warned that the practice may put consumers at serious health risk.
    At an interaction with local physicians and health administrators on US-India health cooperation at the American Center, USAID health wing representative Melissa Freeman said use of antibiotics in sub-therapeutic levels was on the rise in poultry and shrimp farms and posed threat of high drug resistance in humans.

    "Producers of chicken, pig and other meat, as well as shrimp, feed them growth-promoting antibiotics in low doses.This practice does not kill bacteria but makes them resistant to the drug. When the meat or shrimp is consumed, the drugresistant bacteria is transferred to humans," said Freeman.

    Four years ago, Japan had rejected more than 10 consignments of shrimp after detecting ethoxyquin, an antioxidant, in them. Most of the exporters were from Bengal and Odisha . Three years before that, EU had rejected 50 consignments of shrimps after detecting antibiotic residue.

    Feeding small doses of antibiotics to animals daily can lead to 3% more weight gain. The problem, doctors said, was in giving animals antibiotics used to treat humans. "If a person ingests the resistant bacteria via improperly cooked meat and becomes ill, he or she may not respond to antibiotic treatment," said Freeman.

    The World Health Organization has expressed concern about antibiotic resistance and declared its intention to reduce the use of antimicrobials in food animals for the protection of human health. It has recommended that prescriptions be required for all antibiotics used to treat animals and called for phase-out of antimicrobials for growth promotion if they are used for human treatment.

    Microbiologists believe overuse of the Fluoroquinolone group of antibiotics in birds like chicken and turkey , as well as shrimp, has led to increase in treatment-resistant bacterial infections in humans. The drug is used as protection against E.coli infection.

    While sub-therapeutic antibiotic use in food animals is a global practice, American health experts are concerned about India because it is the seventh largest exporter of food products to the US. Shrimps from Bengal constitute a significant portion of exports.

    Matthew Thomas, who represents the Food and Drug Administration (FDA) that oversees food and medical products imported into US, said his agency was reaching out to the industry and conducting training programmes to increase awareness among farmers. 
     
    Source : TOI

    Secret to good health, fitness: Maintaining a food diary



    Recently, Sonam Kapoor’s personal fitness trainer Radhika Karle shared a picture on Instagram of what the Bollywood actor’s diet usually consists of.
    The caption of the picture read: “Want to know @sonamkapoor’s secret to keeping her nutrition on point even when she’s super busy?
    1. Sonam is vegetarian
    2. She loves hummus, avocados, and grilled vegetables stuffed in a pita
    3. She’s been eating on the go at Cannes but everything has been fresh. Stay tuned for more! (sic).”


    Although this was just a one-off listing of the actor’s meal, the act of writing down or documenting what you eat is part of a much larger trend overseas. Maintaining a food journal or diary that documents everything about your daily diet has several health benefits. Many experts, too, encourage the fitness-conscious to maintain a ‘food journal’.
    “Tracking what you eat and drink can keep you focused on your diet. It can motivate you and increase your efficacy. Eventually, it can help you achieve your fitness goals,” says Sheela Tanna, dietician.

    The challenge, however, lies in the fact that a food journal needs to be updated throughout the day, and every time a person eats or drinks anything. And with our busy lifestyles, it can often get difficult to find the time to fill in these details. Nonetheless, in the long run, experts feel it can become a good habit to maintain.


    Source : Hindusthan Times

    Having trouble dozing off? Try cherries


    Having trouble dozing off? Try cherries (Getty Images) 
     Having sleepless nights is not an uncommon phenomenon among adults in today's world, and stress is often found to be blamed for it. But fret not, there's a solution. Drinking tart cherry juice hours before you hit the hay may help one fall asleep faster and even improves the quality and duration of sleep, as well as reduce the severity of insomnia.

    Cherries are naturally high in melatonin, a hormone that induces sleep.
    utritionist "Having about 10-15 cherries before going to bed helps build melatonin, a natural chemical secreted at night in blood. Cherries are safe for people suffering from diabetes . These are low in calories and high in antioxidants, thus increasing immunity. Cherries can also help prevent cancer cells from multiplying, and are best eaten between May and July," says nutritionist Naini Setalvad.


    Source : TOI

    விளைச்சலை அதிகரிக்க விதைகளை பரிசோதனை செய்ய வேண்டும்: விதைச்சான்று அலுவலர் அறிவுறுத்தல்

    விளைச்சலை அதிகரிக்க விதைகளை உரிய பரிசோதனைக்கு பிறகே பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை வலியுறுத்தியுள்ளது.
     இது குறித்து விதைச் சான்று பரிசோதனை அலுவலர் சு.வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்தி:
     வேளாண்மைத் துறையின் வளர்ச்சியில் விதை முக்கியப்பங்கு வகுக்கிறது. நல்ல மரபுப் பண்புகளோடு, புறத் தூய்மை, நல்ல முளைப்புத்திறன், குறிப்பிட்ட அளவு ஈரத்தன்மை மற்றும் பூச்சி, நோய் தாக்கப்படாத விதைகளே நல்ல விதைகள் ஆகும்.
      விதைப் பரிசோதனை நிலையங்கள், சான்று விதை, ஆய்வாளர் விதை மற்றும் பணி விதை என மூன்று மாதிரிகளை அளிக்கின்றன. இதில், சான்று விதைகள் வயல் தரத்தில் தேர்வு பெற்று அறுவடை செய்யப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்யப்பட்ட பின் விதைச் சான்று அலுவலர்களால் மாதிரி எடுத்து விதைத் தரம் காண அனுப்பப்படும்.
     விதைப் பரிசோதனை நிலையத்தில் மாதிரிகள் பெறப்பட்டவுடன் விதைகளின் புறத்தூய்மை, பிற ரகக் கலப்பு மற்றும் ஈரப்பதம் ஆகியவை முதலில் பரிசோதனை செய்யப்படும். புறத்தூய்மை பரிசோதனைக்குப் பிறகு முளைப்புத் திறன் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்படும்.
     இதில், ஒவ்வொரு விதைக்கும் குறைந்தபட்சம் எத்தனை சதவீதம் முளைப்புத் திறன் இருக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்படுகிறது. பின்பு விதையின் புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன் மற்றும் பிற ரகக் கலப்பு ஆகியவற்றின் முடிவறிக்கை அறிவிக்கப்படும்.
     விதைப் பரிசோதனை நிலையத்தில் ஒரு மாதிரி பெறப்பட்டு பரிசோதனை மேற்கொண்டு முடிவுகள் அறிவிக்க அதிகபட்சம் 30 நாள்கள் வரை தேவைப்படும். எனவே விவசாயிகள் தங்களின் விதைகளை உரிய பரிசோதனை செய்து தரத்தை அறிந்து விதைப்பை மேற்கொள்ள வேண்டும். மேலும், விதைகளை நடப்பு பருவத்திற்கு முன்பே அனுப்பித் தரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு விதை மாதிரியைப் பரிசோதனை செய்ய அரசு அதிகம் செலவிடுகிறது. ஆனால், விவசாயிகளின் நலன் கருதி மிகக் குறைந்த கட்டணமாக ரூ.30 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
     எனவே விதைகளை உரிய பரிசோதனைக்குப் பிறகு நடவு செய்து விளைச்சலை அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Source : Dinamani

    வறட்சி காலத்தில் மண்ணின் ஈரம் காக்க விவசாயிகள் கையாள வேண்டிய நுட்பங்கள்: வேளாண்துறை யோசனை

    வறட்சி காலத்தில் மண்ணின் ஈரம் காக்க விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து பழனி வேளாண்துறை அதிகாரி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
     பழனி வேளாண்துறை உதவி இயக்குநர் சுருளியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சாகுபடி செய்த பயிர்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் வைக்கோல் அல்லது தென்னை நார்க் கழிவு போன்றவைகளை நிலப் போர்வையாக இருக்குமாறு நன்கு தூவி விட்டு, சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக பூமியில் படுவதை தடுக்கலாம். இம்முறையில் நீர் பாய்ச்சப்பட்ட நிலங்களில் நீர் ஆவியாவதை தடுப்பது  மட்டுமல்லாமல் களை வளர்வதையும் கட்டுப்படுத்தலாம்.
    கோடையில் சாகுபடி செய்யப்பட்ட இறவை மக்காச்சோளம், பயறு வகைகளில் மேற்க்கண்டபடி மூடாக்கு போடுவதாலும், நீர் தேவை அறிந்து நீர்ப்பாய்ச்சுவதாலும், மகசூல் இழப்பைக் குறைக்கலாம்.
     மேலும் மாலை நேரங்களில் நீர் பாய்ச்சும் பணியினை செய்து நீண்ட நேரம் வரை  மண் ஈரம் காத்து வறண்ட சூழலிலிருந்து பயிரைக்  காக்கலாம்.
      மலைப்பகுதிகளில் ஆழச்சால் அகலப்பாத்தி  முறையினை  கடைபிடித்து, கோடை மழை கிடைக்கும் போது மழைநீரை வழிந்தோடச் செய்வதன் மூலமும் நிலத்தின் ஈரத்தன்மையை அதிகப்படுத்தலாம். மேலும் நீர் பாய்ச்சும் போது, மண் ஈரம் நீண்ட நேரம் காத்திட, ஒரு பாத்தி விட்டு மறு பாத்தி நீரைப் பாய்ச்சினால் மிகவும் ஏற்றதாக இருக்கும். குறைந்த நீரைக் கொண்டு மரப்பயிர்கள், சாகுபடி செய்யப்பட்ட கரும்பு போன்ற பயிர்களைக் காக்க சொட்டுநீர்ப் பாசனம், தெளிப்பு நீர்ப்பாசன முறைகளையும், இலைவழி உரம் தெளிப்பு, நீரில் கரையும் உரம் போன்றவற்றை கையாளலாம். முருங்கை சாகுபடியில் ஊடுபயிராக நிலக்கடலை, உளுந்து அல்லது வெங்காயம் போன்ற பயிர்களை சாகுபடி செய்தலில் உள்ள நீர் மேலாண்மையால் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும்.
     வரப்புப் பயிராக ஆமணக்கு பயிரிடலாம். காலையில் வெயில் வரையிலும், மாலை வெயிலின் தாக்கம் குறைந்த நேரத்திலும் விவசாயப் பணிகளாகிய களையெடுத்தல், மருந்து தெளித்தல், உரமிடல் போன்ற பணிகளை மேற்கொள்வதால் விவசாயிகள் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Source : Dinamani

    விலங்குகளிடமிருந்து வேளாண் பயிரை பாதுகாத்திட "ஹெர்போலிவ்' பயன்படுத்தலாம்: உதவி இயக்குநர் தகவல்

    வேளாண் பயிர்களை எலி, காட்டுப்பன்றி, காட்டு பறவைகள் பாதிப்பிலிருந்து பாதுகாத்திட ஹெர்போலிவ் என்ற மருந்தை பயன்படுத்தலாம் என்று அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி தெரிவித்துள்ளார்.
    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
    விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல், மணிலா மற்றும் கரும்பு பயிர்களில் எலியின் பாதிப்பு, காட்டுப்பன்றி மற்றும் காட்டுப் பறவைகளின் அழிவிலிருந்து பாதுகாக்கவும், பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகவும், நோய் எதிர்ப்பு சக்திக்காகவும் ஹெர்போலிவ் என்ற மருந்தை பயன்படுத்தி பயன் பெறலாம். இந்த மருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் சான்றளிக்கப்பட்ட மருந்தாகும்.இது எலியின் தாக்கத்தில் இருந்து பயிரை பாதுகாக்கிறது. இந்த மருந்தை பயன்படுத்துவதால், நிலத்தின் சத்துக்கள் அதிகமாகிறது.
    நீர்பிடிக்கும் தன்மை மற்றும் நீர் தேங்கினால் பயிர் கெடாமல் இருக்கவும் செய்கிறது. விளை பொருள்களில் உள்ள உயிர் சத்துக்கள் உடலுக்கு அதிகமாக கிடைக்கச் செய்கிறது. விளை பொருள்களின் இருப்பு தன்மை அதிகரிக்கிறது.
    ஹெர்போலிவ் மருந்தை அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் மருந்துடன் 9 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.
    மேலும் தகவல் அறிய விரும்பும் விவசாயிகள் 98423 17805 செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Source : Dinamani

    தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நெல், மக்காச்சோளம் பயிர்களில் அதிக மகசூல் பெறுவது எப்படி? வேளாண் அறிவியல் மையம் விளக்கம்

    அரியலூர், :  நெல், மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து ஆகிய பயிர்களில்  தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவது குறித்து சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் அழகுகண்ணன் விளக்கியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:அரியலூர் மாவட்ட விவசாயிகள் ஜூன் மாதம் (ஆனி மாதம்) செய்ய வேண்டிய வேளாண் பணிகளை விவசாயிகள் தெரிந்து கொள்வது அவசியம்.

    அரியலூர் மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் முதலில் தரமான வீரிய ஒட்டு ரகங்களை தேர்வு செய்ய வேண்டும். ஒரு  ஏக்கருக்கு திருந்திய நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்ய 2 முதல் 3 கிலோ விதை போதுமானது. நெல் நடவு செய்ய 100 மீட்டர் அளவில் மேட்டுபாத்தி நாற்றங்கால் அமைக்க வேண்டும். நாற்றங்காலில் 70 சதவீதம் மண் கலவை 20 சதவீதம் நன்கு மக்கிய தொழு உரம் 10 சதவீதம் நெல் உமி மற்றும் ஒன்றரை கிலோ டை அமோனியம் பாஸ்பேட் அல்லது 2 கிலோ கலப்பு உரத்தினை பொடியாக்கி கலந்து இடவேண்டும். மேலும் இரண்டு கிலோ வீதம் அஸோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா உயிர் உரத்தினை இடவேண்டும். விதை விதைப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு முளைகட்டுதல் செய்ய வேண்டும். அதற்கு விதைகளை 24 மணி நேரம் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம்  வீதம் சூடோமோனஸ் என்ற அளவில் தண்ணீரில் கரைத்துக்கொண்டு  விதைகளை ஊற வைக்க வேண்டும். பிறகு வடிகட்டி ஊற வைத்த விதைகளை காய வைத்தல் வேண்டும். விதை முளைத்து வேர் பிரியும் போது விதைக்க வேண்டும். சூடோமோனஸ் கொண்டு விதை நேர்த்தி செய்வதன மூலம் செம்புள்ளி, குலைநோய் மற்றும் கதிர் அழுகல் நோய் வருவதை கட்டுப்படுத்தலாம்.

    இதேபோன்று மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள், வயலினை மூன்று முறை நன்றாக உழுது அடியுரமாக ஏக்கருக்கு 5 டன் தொழு உரம், யூரியா 30 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 186 கிலோ மற்றும் 33 கிலோ பொட்டாஷ் இட வேண்டும். மேலும் அடியுரமாக அஸோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரத்தினை ஒரு கிலோ வீதம் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும். துத்தநாக சத்து குறைபாடு இருப்பின் ஏக்கருக்கு 5 கிலோ துத்தநாக சல்பேட் நுண்ணூட்ட உரத்தினை 10 கிலோ மணலுடன் கலந்து இடவேண்டும். தரமான வீரிய ஓட்டு ரகமான விதை, ஏக்கருக்கு 8 கிலோ போதுமானதாகும். விதைக்கும் போது பார் அமைத்து வரிசைக்கு சரிசை 2 அடி இடைவெளி விட்டு விதையினை விதைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நெல் மற்றும் மக்காச்சோளத்தில் அதிக மகசூல் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Source : Dinakaran.

    கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க வீடுகளில் காய்கறி தோட்டம் அமைக்கலாம்

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்களது வீடுகளில் அனல் மற்றும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க வீடுகளில் காய்கறி தோட்டம் அமைக்கலாம் என தோட்டக் கலைத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
    ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்ததையடுத்து ஆண்டுதோறும் பூமியில் சூரிய வெப்பம் அதிகரித்து வருகிறது. மேலும் வாயுமண்டலமும் மாசடைந்து வருகிறது. இதையொட்டி அதிகளவில் மரக்கன்றுகளை நட்டுவைத்து பூமியின் உஷ்னத்தை குறைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில் தலைவர்கள் பிறந்தநாளில் மரக்கன்று நடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    தற்போது வீடுகளில் அதிகரித்து வரும் கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றை தடுக்க வசதியுள்ள மாதிகளில் மாடி காய்கறி தோட்டம் அமைக்கலாம் என தோட்டக்கலைத் துறையினர் கூறியுள்ளனர்.
    கடந்த ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ், திட்டக் குழு கூட்டத்தின் போது இ்மாவட்டத்தில் இட வசதியுள்ள மாடிகளில் தோட்டக்கலைத் துறை சார்பில் இட வசதி உள்ள வீடுகளில் காய்கறி தோட்டம் அமைக்க மக்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் பொதுமக்கள் வெப்பத்தில் இருந்து தப்பிக்கவும், வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை எடுத்துக் கொள்ளவும் ஏதுவாக இருக்கும் என தோட்டக் கலைத்துறையினர் கூறினர்.

    source : Dinamani

    மகளிர் விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம்

    மகளிர் விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் தொடக்க விழா கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கத்தில் உள்ள தேசிய வேளாண் நிறுவன அலுவலகத்தில் தொடங்கப்பட்டது.
     விழாவுக்கு மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் கிருஷ்ணம்மாள் தலைமை வகித்தார். தேசிய வேளாண் நிறுவன இயக்குநர் எஸ்.முருகன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
     தொடர்ந்து மகளிர் சமூக வள ஒருங்கிணைப்பாளர்கள் 26 பேருக்கு விவசாயத்தை மேம்படுத்துவது குறித்தும், நவீன விவசாய முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
     பயிற்சிக்கான ஏற்பாடுகளை தேசிய வேளாண் நிறுவனத்தைச் சேர்ந்த திட்ட ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரன், வார்டு உறுப்பினர் மூர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    Source : Dinamani

    மாடிகளில் காய்கறி தோட்டம்: தோட்டக்கலைத் துறையினர் அறிவுறுத்தல்

    திருவள்ளூர் மாவட்ட மக்கள் தங்களது வீடுகளில் சூழும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க வீடுகளில் காய்கறி தோட்டம் அமைக்கலாம் என தோட்டக் கலைத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
     ஆண்டுதோறும் பூமியில் சூரிய வெப்பம் அதிகரித்து வருகிறது. வாயுமண்டலமும் மாசடைந்து வருகிறது. இதையடடுத்து அதிகளவில் மரக்கன்றுகளை நட்டுவைத்து பூமியின் உஷ்ணத்தைக் குறைக்கும் வகையில், தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில், தலைவர்கள் பிறந்தநாளில் மரக்கன்று நடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
     தற்போது வீடுகளில் அதிகரித்து வரும் கடுமையான வெப்பம், அனல் காற்றைத் தடுக்க, வசதியுள்ளவர்கள் தங்கள் வீட்டு மாடிகளில் காய்கறி தோட்டம் அமைக்கலாம் என தோட்டக்கலைத் துறையினர் கூறியுள்ளனர். 

    Source : Dinamani

    Friday, May 27, 2016

    கோடை உழவு செய்தால் மழைநீர் வீணாகாது: விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை


    கோடை உழவு செய்தால் மழைநீர் வீணாகாமல், நிலத்தில் சேமிக்கலாம் என, வேளாண்மை துறையினர் தெரிவித்தனர்.

    கோடை உழவு செய்வது குறித்து வேளாண் துறை அதிகாரி கூறியதாவது: கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு, 652.2 மி.மீ., கோடை பருவத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை, 109.5 மி.மீ., ஆனால், 850 மி.மீ., மழை பெய்துள்ளது. மழையை பயன்படுத்தி, கோடை உழவு செய்வதால் மழைநீர் ஓடி வீணாகாமல் அந்த நிலத்திலேயே சேமிக்கப்படுகிறது. மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. மண்ணிற்குள் இருக்கும் கூட்டு புழுக்கள் அழிக்கப்படுகின்றன. தென்மேற்கு பருவ மழை காலத்தில் பெய்கிற மழையை கொண்டு மானாவாரி பயிர்களை சாகுபடி மேற்கொண்டு பயனடைலாம். கோடை உழவுப் பணிக்கு, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண் கருவிகள் விவசாயிகளுக்கு வாடகைக்கு விடுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வேளாண் பொறியல் துறையில் உழவு இயந்திரம் வாடகையாக மணிக்கு, 340 ரூபாய், மண் தள்ளும் இயந்திரம் மணிக்கு, 840 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் வாடகை தொகையை முன் கூட்டியே செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    Source : Dinamalar

    சேலத்துக்கு 1,100 டன் சன்னரக அரிசி அனுப்பிவைப்பு


    நீடாமங்கலத்திலிருந்து சேலத்துக்கு 1,100 டன் சன்னரக அரிசி பொது விநியோகத் திட்டத்துக்காக வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
    பாமணி மத்திய சேமிப்புக் கிடங்கு, சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை ஆகியவற்றிலிருந்து 88 லாரிகளில் 1,100 டன் சன்னரக அரிசி மூட்டைகள் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டன. 80 சுமை தூக்கும் தொழிலாளர்கள் அரிசி மூட்டைகளை சரக்கு ரயிலின் 22 பெட்டிகளில் ஏற்றினர். இதைத்தொடர்ந்து, அரிசி மூட்டைகள் சரக்கு ரயிலில் பொது விநியோகத் திட்டத்துக்காக சேலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்பணிகள் நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

    source : Dinamani

    ஜூன் முதல் வாரத்தில் பருத்தி ஏலம் தொடக்கம்


    தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், பாபநாசம், திருப்பனந்தாள் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்தி மறைமுக ஏலம் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கப்படவுள்ளது.
    இதுகுறித்து தஞ்சாவூர் விற்பனைக் குழுச்செயலர் மு. ரவி தெரிவித்திருப்பது:
    தஞ்சாவூர் விற்பனைக் குழுவுக்குள்பட்ட கும்பகோணம், பாபநாசம், திருப்பனந்தாள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் நிகழாண்டு பருத்தி மறைமுக ஏலம் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கப்படவுள்ளது. இந்த ஏலத்தின்போது பருத்தி கொள்முதல் செய்ய உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே, பருத்தி விவசாயிகள் தங்களது விளைபொருளை நன்கு நிழலில் உலர வைத்து, தூய்மை செய்து அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்குக் கொண்டு சென்று நல்ல விலைக்கு விற்பனை செய்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு கும்பகோணம், பாபநாசம், திருப்பனந்தாள் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடப் பொறுப்பாளர்களை அணுகலாம்.

    Source : Dinamani

    பறவைக் காய்ச்சல்: நோய் எதிர்ப்பு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்


    கர்நாடக மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் கூடலூரைச் சுற்றியுள்ள கேரள மற்றும் கர்நாடக மாநில எல்லைகளில் வாகனங்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து தெளிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
    கூடலூர் பகுதி கேரளம், கர்நாடக மாநில எல்லைகளில் அமைந்துள்ளது. கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக கிடைத்த தகவலையடுத்து, கர்நாடக மாநிலத்தின் நுழைவுவாயிலான கக்கநல்லா சோதனைச் சாவடி, வயநாடு மாவட்டத்தின் எல்லைகளான பாட்டவயல், அம்பலமூலா, நம்பியார்குன்னு, கக்குண்டி, சோலாடி, மலப்புரம் மாவட்ட எல்லையான கீழ் நாடுகாணி ஆகிய பகுதிகளில் வெளி மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.
    கால்நடை பராமரிப்புத் துறையினர் சோதனை செய்து நோய்த் தடுப்பு மருந்துகளை தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதையில் கிருமி நாசினிகளை பரப்பிவிட்டு அதன் மீது வாகனங்களை நகர்த்தி சோதனை செய்த பிறகே தமிழகத்துக்குள் வாகனங்களை அனுமதிக்கின்றனர்.

    Source : Dinamani

    உதகையில் மலர்த் திருவிழா: 120-ஆவது மலர்க் காட்சி இன்று தொடக்கம்


    உதகையின் பிரதான மலர்த் திருவிழாவான மலர்க் காட்சி அரசினர் தாவரவியல் பூங்காவில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
    3 நாள்கள் நடைபெறும் இக்கண்காட்சியை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு தொடங்கி வைக்கிறார்.
    உதகையில் ஆண்டுதோறும் அரசினர் தாவரவியல் பூங்காவில் மே மாதத்தின் மூன்றாவது வாரத்தில் மலர்க் காட்சி நடைபெறும். ஆனால், இவ்வாண்டில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடவடிக்கைகளின் காரணமாக மலர்க் காட்சி மே மாதத்தின் கடைசி வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, வெள்ளிக்கிழமை காலையில் இக்கண்காட்சியை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு தொடங்கி வைக்கிறார். மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் தமிழக அரசின் வேளாண்மைத் துறை செயலாளர் விஜயகுமார், தோட்டக்கலைத் துறை இயக்குநர் சித்திரசேனன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
    இந்த மலர்க் காட்சிக்காக பூங்காவில் பல்வேறு மலர்களாலான வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், குறிப்பிடத்தக்க அம்சமாக ஒரு லட்சம் காரனேஷன் மலர்களைக் கொண்டு மணிகூண்டுடன் கூடிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முன்புறத் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. 68 அடி உயரத்திலும், 30 அடி அகலத்திலும் இந்த மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல, சுமார் 10,000 காரனேஷன் மலர்களைக் கொண்டு இரட்டைக்குருவி உருவம் உருவாக்கப்பட்டுள்ளது.
    பூங்காவில் உள்ள காட்சி மாடத்தில் துலிப், கிரசாந்திமம், பிண்டுஷன் போன்ற வெளிநாட்டு மலர்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் நெதர்லாந்து நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டவையாகும். அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் விளையும் கொய் மலர்களான ஜெர்பரா, காரனேஷன், லில்லியம் மற்றும் கிரசாந்திமம் போன்ற மலர்களும் காட்சி மாடத்தில் வைக்கப்பட்டுள்ளன. காட்சி மாடத்தில் மட்டும் 15,000 மலர்த்தொட்டிகளும், புது பூங்காவில் 6,000 மலர்த் தொட்டிகளும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
    மேலும், பூங்காவின் முன்புற வாயிலிலிருந்து மலர்க் காட்சி அரங்கு வரை 10 இடங்களில் மலர் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. பூங்காவின் நுழைவுக் கட்டணத்தை வசூலிக்கும் பொறுப்பை தோட்டக் கலைத் துறையினரே மேற்கொண்டுள்ளனர். பெரியவர்களுக்கு ரூ. 30-ம், சிறியவர்களுக்கு ரூ. 15-ம், கேமராவிற்கு ரூ. 50-ம், விடியோ கேமராவிற்கு ரூ. 100-ம் கட்டணங்களாகும். பூங்காவில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மலர்க்காட்சியை கண்டுகளிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மலர்க் காட்சியையொட்டி பூங்காவைச் சுற்றிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 3 நாள்களிலும் பூங்காவிற்குள் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    தினமணி அரங்கு:
    உதகை மலர்க் காட்சியில் முதன்முறையாக தினமணியின் சார்பில் காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் கடந்த 80 ஆண்டுகளில் தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைளில் முதல் பக்கத்தில் வெளியான முக்கியச் செய்திகளின் தொகுப்பு இடம் பெற்றுள்ளது. அதேபோல, தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளின் இதர வெளியீடுகள் தொடர்பான விவரங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    Source : dinamani

    கொடைக்கானலில் கோடை விழா மலர்க் கண்காட்சி நாளை தொடக்கம்


      கொடைக்கானலில் கோடை விழா மலர்க் கண்காட்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. 
       இதையொட்டி, பிரையண்ட் பூங்காவில் சால்வியா, டேலியா, டைந்தேஷ், ஆந்தோரியம், மேரிகோல்ட், சில்வேனியா, ரோஜா உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வகைகளில் லட்சக்கணக்கான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. மேலும், ஆயிரக்கணக்கான மலர்களால் மயில், தாஜ்மகால் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் காய்கறிகளால் கோபுரங்கள் உருவாக்கப்பட்டு கண்காட்சியாக வைக்கப்பட உள்ளது.
       தொடர்ந்து ஜூன் 6-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற உள்ள கோடை விழாவில், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், நாய் கண்காட்சியும் நடைபெறுகிறது. விழாவையொட்டி சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை தோட்டக் கலைத் துறை நிர்வாகம் செய்துள்ளது. 
       இதேபோல, படகு குழாம் சார்பில் 28, 29 ஆகிய தேதிகளில் படகுப் போட்டி, வாத்து பிடிக்கும் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரையிலான 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர் என கொடைக்கானல் படகு குழாம் மற்றும் ரோயிங் கிளப் கௌரவச் செயலர் பவானி சங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

      Source : Dinamani

      ‘இந்தியாவில் பயிர் செய்வோம்’ என்பதை ஊக்கப்படுத்துங்கள் பிரதமர் மோடிக்கு விவசாயிகள் புதுவிதமாக கோரிக்கை




      புதுடெல்லி, 

      ‘இந்தியாவில் பயிர் செய்வோம்’ என்பதை ஊக்கப்படுத்துங்கள் என்று  பிரதமர் மோடிக்கு விவசாயிகள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் விதமாக கோரிக்கை விடுத்து உள்ளனர். 

      ”மேக் இன் இந்தியா” என்ற திட்டத்தின் வரிசையில் ‘இந்தியாவில் பயிர் செய்வோம்’ திட்டத்தையும் ஊக்கப்படுத்துங்கள் என்று வயல்வெளியில் பயிர்கள் மூலம் மோடியின் உருவத்தை வடிவமைத்து கோரிக்கையை முன்வைத்து உள்ளனர். பிரதமர் மோடி இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபட செய்வதற்காக வேண்டுகோள் விடுக்கவேண்டும் என வலியுறுத்தி பரத்சிங்கா என்ற கிராமத்தில் ஓவியத்தை விவசாயிகள் வடிவமைத்துள்ளனர். பிரதமர் மோடியின் உருவப்படம் கொண்ட இந்த ஓவியம் 7,200 சதுர அடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

      விவசாயி ஸ்வேதா பட்டாத் பேசுகையில் “பேனா முனைக்கு இருக்கும் வலிமை கலைக்கும் உள்ளது. பிரதமர் மோடி மேக்-இன்-இந்தியா திட்டத்தை வலியுறுத்திப் பேசி வருகிறார். அவர், இந்தியாவில் பயிர் செய்வோம் திட்ட பிரச்சாரத்தையும் முன்னெடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இப்போதைய நாட்களில் விவசாயிகள் ஏராளமான பிரச்சினைகளை சந்திக்கின்றனர் மற்றும்  இளைஞர்கள் விவசாயிகளாக விரும்புவதில்லை. எனவே, அவர்களை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்றுகூறிஉள்ளார்.  

      விவசாயிகளும், ஓவியர்களும் ஒன்றாக சேர்ந்து சுமார் மூன்று மாதங்களாக உழைத்து இந்த உருவப்படத்தை உருவாக்கியுள்ளனர். ஓவியத்தில், ‘டியர் பிரதமர், தயவு செய்து இந்தியாவில் விளை விப்போம்’ என்ற வாக்கியத்தையும் அவர்கள் அமைத்துள்ளனர். பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிஉள்ள விவசாயிகள், உள்நாட்டு பாரம்பரிய விதைகள் கிடைக்காதது மற்றும் பூச்சிக் கொல்லி தட்டுப்பாடு மற்றும் இயற்கை விவசாயத்தின் தேவை குறித்தான விளக்கங்களை வெளிப்படுத்திஉள்ளனர். 

      “கடந்த 30 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். உள்நாட்டு பாரம்பரிய விதைகள் கிடைப்பது கடினமாக உள்ளது. இதுதொடர்பாக பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விவசாயி வசந்த் கூறிஉள்ளார். பிரதமர் மோடியின் ஓவியம் பயிரால் 7,200 சதுர அடியில் வடிவமைக்கப்பட்டு உள்ளது பலரை ஈர்த்து வருகிறது. அதிகபேர் சென்று பார்த்து வருகின்றனர். பிரதமர் மோடியும் இதனை கவனிப்பார், விவசாயத்தை லாபகரமாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

      Source : Dailythanthi

      கரும்பு சோகைகளை மக்கச்செய்யும் நுண்ணுயிர் கூட்டுக்கலவை அறிமுகம்

      விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்தில் கரும்பு விவசாயிகள் பலன் அடையும் வகையில் கரும்பு சோகைகளை மக்கச்செய்யும் புதிய நுண்ணுயிர் கூட்டுக்கலவை அறிமுகம் செய்து அதற்கான செயல்விளக்க பயிற்சி தியாகதுருகம் அருகே வடதொரசலூரில் விவசாயிகளின் வயலுக்கு சென்று அதிகாரிகள் செய்து காட்டினர். 

      தலைமை வேளாண்மை இணை இயக்குனர் ரவி தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குனர் கனகசபை, நீர்வள மேம்பாட்டு உதவி இயக்குனர் கோவிந்தன், வேளாண்மை அதிகாரி சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குனர் ராமச்சந்திரன் வரவேற்றார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானி சுப்ரமணியன்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில்,
      விவசாய நிலங்களில் உள்ள கழிவுகளை (இலைகள், கரும்பு சோகை, தழை) அந்த மண்ணிலேயே குறுகிய காலத்தில் மட்கவைத்து உரமாக்குவதற்கு இந்த நுண்ணுயிர் கூட்டுக்கலவை பயன்படுகிறது. ஒரு ஏக்கர் கரும்பு வயலுக்கு 10 கிலோ போதும். இக்கலவையை 20 கிலோவிற்கு 40 லிட்டர் நீர் கலந்து தெளித்தால் போதும், நிலம் ஈரப்பதத்துடன் இருப்பது முக்கியம். 60 நாட்களில் முழுவதுமாக கரும்பு தோகைகள் மக்கிவிடும். இது மண்ணுக்கு சிறந்த சத்தாகும். மண் பரிசோதனை செய்து அதற்கேற்றவாறு பயிரிடவேண்டும். 

      பயிர்களை தாக்கும் நோய்களை விவசாய அதிகாரிகளிடம் காட்டி அவர்கள் கூறும் ஆலோசனைப்படி மருந்துகளை தெளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினர்.
      வேளாண்மை அலுவலர்கள் நித்யா, பொன்னுராசன், தனியார் சர்க்கரை ஆலை அலுவலர் திருமூர்த்தி, உதவி வேளாண்மை அலுவலர்கள் பழனிசாமி, சேகர், கோபால், வெங்கடேசன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். உதவி வேளாண்மை அலுவலர் ஞானவேல் நன்றி கூறினார்.

      Source : Dinakaran

      கொய்மலர்களால் அலங்கார வளைவுகள்: ஊட்டி மலர் கண்காட்சியில் ஒரு லட்சம் வண்ண மலர்களால் ‘சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்’

      மலர் கண்காட்சியில் ஒரு லட்சம் மலர்களை கொண்ட சென்னை சென்டரல் ரயில் நிலையத்தின் முகப்பு தோற்றம், கொய்மலர்களை கொண்டு சிட்டுக்குருவி மற்றும் நுழைவு வாயில்களில் கொய்மலர்களால் ஆன அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 27ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை மூன்று நாட்கள் 120வது மலர் காட்சி நடக்கிறது. மலர் காட்சியை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகைகளை கொண்ட 4 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இன்கா மேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயான்தஸ், பெகோனியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ், வயோலா, அஜிரேட்டம், கேலண்டுலா, கிளாடியோலஸ், லலில்லியம், சன்பிளவர், சப்னேரியா போன்றவை பூங்காவில் பல்வேறு பகுதிகளில் மலர் பாத்திகளில் நடவு செய்யப்பட்டு பொலிவுடன் பார்வையாளர்களை கவர்ந்த வருகிறது.  
      15 ஆயிரம் தொட்டிகள் மலர் கண்காட்சி மாடத்தில் பார்வையாளர்களை கவரும் வகையில் அலங்கரித்து வைக்கப்படவுள்ளது. மேலும், 6 ஆயிரம் தொட்டிகள் புது பூங்காவில் அலங்காரங்கள் செய்யப்படவுள்ளது. இம்முறை 120வது மலர் காட்சியை முன்னிட்டு பல வண்ணங்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கார்னேசன் மலர்களை கொண்டு 68 அடி நீளம் 30 அடி உயரம், 10 அடி அகலம் கொண்ட சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முகப்பு தோற்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கார்னேசன் மலர்களை கொண்டு 10 அடி நீளம், 4 அடி அகலம், 6 அடி உயரம் கொண்ட சிட்டுக் குருவியின் உருவம் அமைக்கப்படவுள்ளது. பல ஆயிரம் கொய் மலர்களை கொண்டு 5 நுழைவு வாயிலும், ஆர்கிட் மலர்களை கொண்டு 5 அலங்கார வளைவுகள் உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. 

      இது தவிர மலர்களை கொண்டு பல்வேறு ரங்கோலி அமைக்கப்படுகிறது. மேலும், தோட்டக்கலைத்துறையினர் வளத்தை சித்தரிக்கும் வகையில் தோட்டக்கலை அரங்கு அமைக்கப்பட்டு மலர்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முக்கிய கண்காட்சி பொருட்கள் கொண்டு வரப்பட்டு காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. நெதர்லாந்து நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட டூலிப் மலர் அலங்காரமும் செய்யப்படுகிறது. மேலும், மூன்று நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. அரசுத்துறை அரங்குகள் போட்டியாளர் அரங்கும் அமைக்கப்படும். இந்த ஆண்டின் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பூங்காக்களை அமைத்து போட்டிக்காக பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு சிறந்த பூங்காவிற்கான சுழற்கோப்பை வழங்கப்படவுள்ளது.

      Source : Dinakaran

      நவீன திராட்சை ரகங்களை 'குளோனிங்' செய்து விவசாயிகளுக்கு வழங்க முடிவு


      தமிழகத்தில் திராட்சை சாகுபடி பரப்பு சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. பழைய ரகங்கள், மகசூல் குறைவு போன்றவற்றால் விவசாயிகள் பாதிக்கின்றனர்.
      எனவே விவசாயிகளுக்கு ஏற்றுமதி ரகம் மற்றும் ஒயின் ரகங்களை சாகுபடி செய்ய ஆராய்ச்சி நிலையம் ஊக்குவித்து வருகிறது. ஆனால் அதற்கான வாய்ப்புக்கள் குறைவாக இருக்கிறது.
      வர்த்தக ரீதியில் நல்ல விளைச்சல் தரக்கூடிய மாணிக் சாமன், ரெட்குளோப், சரத்சீட்லெஸ், கிருஷ்ணாசீட்லெஸ், மெடிக்கா, ஏ 18-3 போன்ற ரகங்களை சாகுபடி செய்ய விரும்பினாலும், அதற்கான குச்சிகள் கிடைப்பதில் பிரச்னைகள் உள்ளது. எனவே இந்த ரக குச்சிகளை தாய் குணம் மாறாமல் மரபு வழி பெருக்கம் மற்றும் உற்பத்தி செய்ய ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையத்தில் 2 ஏக்கர் பரப்பில்'மதர் நர்சரி' அமைக்கப்பட்டது.
      ஆராய்ச்சிநிலைய தலைவர் பார்த்திபன், உதவி பேராசிரியர் சுப்பையா கூறுகையில், “உயர் விளைச்சல் தரக்கூடிய 125 ரகங்களை புனே மற்றும் ஐதராபாத்தில் உள்ள தேசிய திராட்சை ஆராய்ச்சிநிலையங்களில் இருந்து வாங்கி, நமது ஆராய்ச்சி நிலையத்தில் கிராப்ட் (குளோனிங்) செய்துள்ளோம். தாய் குணம் மாறாமலும், மரபு வழியிலும் இந்த ரகங்கள் இருக்கும்.
      இதற்கென பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு அந்த ரகங்களின் குச்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்,” என்றனர்.---


      Source : Dinamalar

      நாவல் பழ சீசன்


      கூடலுாரில் நாவல் பழ சீசன் துவங்கியுள்ளது.
      கூடலுார் வனப்பகுதியில் இயற்கையாக விளையும் மூலிகை செடிகள், பழங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. அதில், மருத்துவ குணம் கொண்ட, நாவல் பழ சீசன் தற்போது துவங்கி உள்ளது. உள்ளூர் மக்கள் இதனை விரும்பி உண்டு வருகின்றனர்.
      கடைகளில் விற்பனை செய்யப்படும், இந்த பழங்களை சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். சித்தா மருத்துவர்கள் கூறுகையில் 'இரும்பு சத்து நிறைந்துள்ள நாவல் பழத்தை உண்பதன் மூலம், ரத்த ஓட்டம் சீராகும். இதன் பட்டையை காய வைத்து, பொடியாக்கி பயன்படுத்தினால் வயிற்றில் ஏற்படும்
      நோய் கிருமிகள் அழியும்; ரத்தசோகை நோயும் மாறும். இதனை மனிதர்கள் விரும்பி உண்டாலும், வன உயிரினங்களுக்காகவும் அதனை வனப்பகுதியில் விட வேண்டும். முழுமையாக அவற்றை பறிக்க கூடாது ' என்றனர்.

      Source : Dinamalar

      விவசாயிகள் சங்க மாநில மாநாடு


      தாராபுரத்தில் விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாட்டை நடத்துவது என நேற்று நடந்த மாநில நிர்வாககுழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
      கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் நேற்று காலை தாராபுரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் காளிமுத்து தலைமை வகித்தார். சந்திரசேகரன், சுப்பிரமணியன், அவினாசி முத்துச்சாமிகவுண்டர் உட்பட பலர் சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
      சங்கத்தின் நிறுவனராக இருந்து விவசாயிகளின் உரிமைகளுக்கு குரல் கொடுத்த, மறைந்த தலைவர் பழனிச்சாமிக்கு இரங்கல் தெரிவிப்பது. கடந்த, 1976ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் மரணம் அடைந்த, 40 விவசாயிகளின் குடும்பங்களுக்கு, ஐந்து லட்சம் நிவாரணம் வழங்கியதற்கு நன்றி. அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற நிதி ஒதுக்கி ஆணை பிறப்பித்ததற்கு நன்றி. விவசாயிகளின் பயிர் கடன்களை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றி. வரும் ஜுலை மாதம், 5ம் தேதி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாடு மற்றும் பேரணியை தாராபுரத்தில் சிறப்பாக நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தமிழக சட்ட விழிப்புணர்வு இயக்க தலைவர் செல்வராஜ், கோவை மாவட்ட நிர்வாகி பாபு, திருப்பூர் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

      Source : Dinamalar

      Workshop from tomorrow on borewell recharging


      The Hyderabad Karnataka Chamber of Commerce and Industry (HKCCI), in association with Dr. S.S. Siddareddy Foundation and Tilak Nagar Welfare Association, will organise a two-day workshop on “Borewell Recharging Techniques-A Mission” here from Saturday.

      HKCCI president Somshekar G. Tengli, addressing presspersons here on Thursday, said that hydro geologist N.J. Devaraj Reddy from Chitradurga will deliver a special lecture on ground water rejuvenation and rainwater harvesting by scientific method.
      On Sunday, Mr. Reddy will participate in an interaction with farmers and students from different colleges. A demonstration on rainwater harvesting and methods to improve groundwater level will be conducted.
      Kalaburagi Mayor Syed Ahmed and Commissioner of Kalaburagi Mahanagara Palike P. Sunil Kumar will be the chief guest.

      Source : The Hindu 

      Help farmers with fresh loans, banks told


      Zilla Panchayat CEO Sushma Godbole has asked the bankers to help the farmers with fresh loans in the wake of drought and resultant crop failure. Chairing the coordination committee of bankers organised here by Vijaya Bank (lead bank for the district), she said the farmers should not be forced to repay their old debt and the old loans should be rescheduled. “Farmers will not hesitate to repay the loans once they get good rain and a good crop. They should not be harassed for repayment as they would again be in the clutches of private moneylenders,” she said.

      RBI representative Jayaprakash Narayan said that June 30 is the last date for submitting Aadhaar number for the Prime Minister’s Jan Dhan Yojana . Agriculture officer Kattegoudar explained the crops covered under the crop insurance scheme.

      Source : The Hindu 

      FDI in food processing may cross $1 billion


      Foreign direct investment (FDI) in the food processing sector is expected to cross $1 billion in the next two years, helped by reforms in FDI space and streamlining of FSSAI regulations, Union Minister Harsimrat Kaur Badal has said.

      Highlighting achievements of two years of the NDA Government, Ms. Badal told PTI that her ministry has permitted development of 17 new food parks across the country and is making efforts to operationalise all 42 parks by 2019 that will help double processing level of fruits and vegetables to 20 per cent.
      The ministry has also approved setting up of 30 new cold chains in the country.
      The government has announced 100 per cent FDI in marketing of food products produced and processed in India in this year’s Budget.
      “From the very first day after assuming office, my aim was to carry out those reforms which promote investment in the food processing sector, raise farmers’ income and generate employment opportunities,” Ms. Badal said.
      Streamlining rules
      Besides food parks, she said the rules and regulations of the food regulator FSSAI had been streamlined to boost food processing sector. “I am quite confident that FDI inflows will cross $1billion on the back of these two major reforms — streamlining of FSSAI norms and 100 per cent FDI in food processing,” Ms. Badal said.
      The food processing sector has attracted $463 million worth of FDI during April-February of the last fiscal, she added.
      According to Ms. Badal, growth of the food processing sector will help farmers get better price for their produce as well as lead to reduction in wastage and lower prices of fruits and vegetables.
      “As of now, we only process 10 per cent of the our total production of fruits and vegetables, which the Narendra Modi Government is working on to double to 20 per cent of the total output of these two commodities,” Ms. Badal added.
      To achieve this, the government has taken various steps to create infrastructure at the farm gate level. The ministry had allocated 17 food parks and about Rs.50 crore per food park will be given as grant.
      “In the last two years, seven food parks have become operational while during the UPA’s 10-year tenure, only two parks were operationalised,” Ms. Badal averred, adding that the target is to operationalise all 42 mega food parks by 2019. The minister said once the processing level reaches 20 per cent, consumers would have the option of processed fruits and vegetables and that too, at affordable prices. — PTI
      Growth of food processing sector
      will help farmers
      get better prices
      for their produce

      Source : The Hindu 

      Govt plans national food grid to ease supply, rein in prices


      The government plans to set up a “national food grid” to move fruit and vegetables from surplus areas to deficit ones quickly by ramping up storage and processing as part of a long-term strategy to contain food prices.
      The food processing ministry will bring in the “National Food Grid Development Authority Bill” that will enable seamless movement of food products,” food processing minister Harsimrat Kaur Badal told HT.
      A “food grid” is akin to a power grid that speedily allocates power according to demand.
      Badal said that a national cold chain network would be an essential part of the grid for ferrying goods during glut and shortfall.
      The National Food Grid Development Authority will undertake mapping of all gaps in terms of infrastructure for storage, cold chains, markets and food testing laboratories.
      “We shall bring policies, which shall put food processing on an auto-pilot seamless growth mode,” Badal said. “We began with Nabard agriculture loans, FDI in food retail and now we are focussing on food processing infrastructure”.
      In 2014, the government set up a Rs 2,000-crore corpus for National Bank for Agriculture and Rural Development (Nabard) to help lend to food-processing units at a lower interest rate.
      In the budget for 2016-17 in February, finance minister Arun Jaitley announced the government’s intent to allow 100% foreign direct investment (FDI) in food retail.
      FDI in multi-brand retail for food products will also likely come bundled with the condition that these items are completely produced in India.
      Inter-ministerial consultations have begun for writing the finer policy rules for fully opening up the food sector to overseas investors.
      Although India’s food processing industry accounts for 32% of the total food market, only 2-3% of India’s vegetables are processed into various products to increase their shelf life. “The objective is to develop a singlewindow mechanism for all kinds of approvals in a stipulated time-frame for food processing industries. The national food grid authority will bring about a transparent regulatory approval system,” the minister said.
      All power of approvals and regulations shall be vested in the authority, which will have representatives from industry, farmers and labour.
      T he Food Safety and Standards Authority of India (FSSAI) has harmonised product standardisation for more than 8,000 additives, bringing them on a par with global Codex parameters, a joint WHO-FAO Food standards programme, Badal said. “This is a big step forward because until recently the FSSAI acknowledged only 370-odd categories, which made the product approval procedure tedious and cumbersome for the food processing industry.”

      Source : Hindusthan Times

      Interview with Union agriculture minister Radha Mohan Singh

       First two years of the NarendraModi government had to suffer two back-to-back drought that had its bearing on foodgrain production, but India could somehow manage to minimize the impact. The year 2015-16 was worse in terms of deficit rainfall. Still, the country is estimated to record slightly higher foodgrain production this crop year (July-June) as compared to 2014-15. Union agriculture minister Radha Mohan Singh in an interview to Vishwa Mohan gave the credit to hard works put in collectively by all stakeholders including Centre, states and farmers. He emphasized on the roles of science in making India completely 'drought proof' in future and also enlisted the initiatives taken by his government to achieve this goal, provided states fully come on board.


      Excerpts:

      Q. What all the Centre had done to provide relief to farmers in case of disaster\drought?

      A. We have revised the norms for providing relief to farmers and extended record amount of financial assistance to states in the past two years. Relief is now being given in case of 33 per cent damage to the crop as against the earlier norm of 50 per cent damage or more. The compensation amount under various heads has also been increased by 50 per cent. It was a historical decision, taken last year at the behest of the Prime Minister Narendra Modi.

      Besides, the Centre had approved nearly Rs 9,017 crore as relief to the states affected by drought and hailstrom as against their demand of Rs 42,021 crore in 2014-15 and approved Rs 13,497 crore during 2015-16 crop year as against the demand of Rs 41,722 crore. In contrast, the UPA government had merely approved a relief of Rs 12,516 crore as against the demand of Rs 92,043 crore during four years from 2010-14.

      Q. Have the disaster/drought-affected farmers actually got the relief amount? Does the Centre's role end after extending financial assistance to states?

      A. Under the Constitution, agriculture is the state subject and it is the states responsibility to disburse the relief amount to affected farmers. We have, however, been in constant touch with district-level officers through dialogue, pushing them not only to disburse the amount to farmers quickly but also to implement the various schemes — Soil Health Cards, Prime Minister Agriculture Irrigation Plan and National Gokul Mission among others — at local level.

      Many states have been implementing all these schemes quite sincerely. But, few others have not been that successful. It all depends on states' sensitivity towards farmers.

      Q. Which are those states that have not properly implemented the central schemes?

      A. If you travel from Delhi to Kolkata by train and look outside, you would easily find out that the states (Uttar Pradesh, Bihar and West Bengal) on the way have not implemented many of the central schemes that successfully as compared to others.

      Q. In the existing system where "patwari" (local revenue officer) decides the actual beneficiaries, how would you ensure that only the real disaster-hit farmers get relief?

      A. That's the reason why we have been promoting use of technology and drone-based survey to map the affected areas and identify the real affected farmers. The centre is also assisting the states to arm the local agriculture officers with smart phones and other scientific tools to make the farmers aware of all the central schemes and their rights over financial assistance. The direct benefit transfer (DBT), launched by us, will also ensure that the farmers can get quick relief.

      Q. Many farmers have committed suicides in past two years. It seems the relief does not reach them. How can this unfortunate trend be stopped?

      A. Many farmers took the extreme steps as they had to depend on loans from moneylenders. In case of crop failure, they lost everything. We don't want farmers to trap in such a situation and therefore out government has launched the Prime Minister Crop Insurance Scheme. This is the biggest ever financial support by the central government in crop insurance. Farmers will have to pay lowest ever premium. It will provide them full financial security in case of crop failure. The scheme, which is to be implemented from the Kharif (summer crop) season this year, will cover and disburse relief to even those farmers who are unable to sow\transplant due to bad weather. Mobile and satellite technology will be used for the first time for quick and correct assessment of loss so that farmers can get their claims without any delay.

      Source :  TOI