நன்னீர் வரத்து குறைதல், மரங்களை வெட்டுதல் போன்ற காரணங்களால் அழியும் நிலையில் உள்ள சதுப்புநில காடு களை கடலோர மக்கள் உதவி யோடு பாதுகாக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.ஆறுகள் கடலில் சேருமிடங் களில் சதுப்புநிலக் காடுகள் காணப்படுகின்றன. இந்த காடுகள் சுனாமி, புயல், கடல்நீர் ஊருக்குள் புகுதல் போன்றவற்றில் இருந்து கடலோர பகுதிகளை பாதுகாக் கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தியில் கண்ணாமுனை, முத்துரகுநாதபுரம், திருப்பாலைக் குடி உப்பூர், காந்திநகர், மோர் பள்ளம் உள்ளிட்ட 12 இடங்கள் மற்றும் மன்னார் வளைகுடாவில் திருப்புல்லாணி கோரைக் குட்டத்தில் காணப்படுகின்றன. இவை 556.11 எக்டேர் பரப்பில் உள்ளன. இந்த காடுகளில் கண்டன், நரிகண்டன், மரமா உள்ளிட்ட 48 வகையான மரங்கள் காணப்படு கின்றன. இங்கு மிதவை, இறால், நண்டு, மீன் உள்ளிட்ட உயிரி னங்கள் அதிகளவில் உள்ளன. இந்த மரங்களின் வேர்கள் "கேபிள்' போன்று பூமிக்குள் செல்லும். இவற்றின் விதைகள் நீரில் விழுவதால் எளிதில் முளைப்ப தில்லை. எதிர்பாரத விதமாக மண்ணுக்குள் புதைந்தால் மட்டுமே முளைக்கும். சிலசமயங்களில் தாய் மரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் போதே விதைகள் முளைத்துவிடும். பின் அவை கீழே விழுந்து முளைக்க ஆரம்பிக்கும். இதற்கு முளைப்புத் திறன் குறைவால் எளிதில் பெருக்க மடைவதில்லை.
நன்னீர் வரத்து குறைவு, விறகு களுக்காக மரங்களை வெட்டுதல், நீரின்றி காய்ந்து போதல் போன்றவற்றால் சதுப்புநிலக் காடுகள் அழிந்து வருகின்றன.
இவற்றின் பரப்பை குறையாமல் பாதுகாக்கும் முயற்சியில் அப்பகுதி மக்கள் உதவியுடன் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.வனத்துறையினர் கூறியதாவது: மரங்கள் அழிந்துபோகும் இடங் களில் மறு உருவாக்கம் செய்து வருகிறோம். ஆண்டிற்கு 5 முதல் 10 எக்டேர் வரை விதைகளை நடவு செய்கிறோம். இதில் குறிப்பிட்ட விதைகள் மட்டுமே முளைக் கின்றன. நன்னீர் வரத்தை அதிகரிக்க ஏற்பாடு செய்கிறோம். சதுப்புநில காடுகளின் நன்மை மக்களிடம் எடுத்துகூறி அவற்றை பாதுகாக் கிறோம், என்றனர்.
Source : Dinamalar
No comments:
Post a Comment