சிங்கம்புணரி வட்டாரத்தில் தென்னை மரங்களுக்கிடையே ஊடு பயிராக வாழை பயிரிட்டு விவசாயிகள் லாபம் ஈட்டுகின்றனர்.சிங்கம்புணரி- எஸ்.புதூர் ஒன்றியத்தில் இறவை பாசனத்தில் தென்னை சாகுபடி செய்யப் படுகிறது.ஒரு தென்னை மரத்திற்கும் இன்னொரு மரத்திற்கும் 30 அடி வரை இடைவெளி விடப்படுகிறது. இந்த இடை வெளியில் வாழை ஊடுபயிர் சாகுபடி செய்கின்றனர். தென்னைக்கு பாயும் நீரில் வாழை செழித்து வளர்கிறது. ஒரு முறை வாழை ஊடுபயிர் செய்தால் 3 வருடம் வரை காய், இலை அறுவடை செய்யப் படுகிறது.
வாழை மரகழிவு தென்னைக்கு இயற்கை உரமாக அமைகிறது. நீர் பாசன வசதியுள்ள விவசாயிகள் பலரும் தென்னையில் வாழையை ஊடுபயிர் செய்கின் றனர்.
கட்டுக்குடிப்பட்டி விவசாயி அடைக்கண் கூறியதாவது: மதுரை கொட்டை வாழை ரகம் 4 ஏக்கர் தென்னையில் ஊடுபயிர் செய்தேன்.தென்னையில் ஆண்டுக்கு 6 முறை தேங்காய் இறக்குவோம். வாழையில் காய் வெட்டுவதை தவிர்த்தால் இலை அதிகம் கிடைக்கும். திருமணம், விழாக் காலங்களில் இலை ஒன்று ரூ 3 வரை நல்ல கிராக்கியுடன் விற்பனையாகிறது.வியாபாரிகள் தோப்பிற்கே வந்து வாங்கிச் செல்கின்றனர். ஏக்கருக்கு வாழையில் ஆண்டிற்கு ரூ.50 ஆயிரம் லாபம் கிடைக்கிறது என்றார்.
source : Dinamalar
No comments:
Post a Comment