சாகுபடியில், 40 சதவீத மானியத்தில் காய், கனி விதைகளை பெற விரும்பும் விவசாயிகள், அந்தந்த தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை நாடலாம் என, தோட்டக்கலை துணை இயக்குனர் தெரிவித்து உள்ளார். காஞ்சிபுரம் தோட்டக்கலை துறை, துணை இயக்குனர் கோல்டி பிரேமாவதி கூறியதாவது:காய்கனி பயிரிடும் விவசாயிகள் சாகுபடி பரப்பிலிருந்து, 40 சதவீதம் மானியம் பெறுவதற்கு உரிய ஆவணங்களுடன், அந்தந்த வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நாடி, காய்கனி விதைகளை வாங்கி பயன் பெறலாம்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Source : Dinamalar
Source : Dinamalar
No comments:
Post a Comment