தோட்டக்கலை துறையின் மூலம், 25 விவசாயிகளுக்கு, காய்கறி விதைகள் இலவசமாக நேற்று வழங்கப்பட்டன.திருத்தணி ஒன்றியத்தில், 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தோட்டப்பயிர்கள் மட்டுமே செய்து வருகின்றனர். இவர்கள் பயன்பெறும் வகையில், தோட்டக்கலை துறையின் சார்பில், கத்திரி, வெண்டை, பாகல் மற்றும் சொரைக்காய் போன்ற காய்கறி பயிர்களுக்கு விதைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.ஒரு ஏக்கருக்கு கத்திரி மற்றும் வெண்டை விதைகள், 900 கிராம், பாகல் மற்றும் சொரைக்காய் விதைகள், 750 கிராம்
விதைகள் இலவசமாக வழங்கப்பட்டன.நேற்று, 25 விவசாயிகளுக்கு மேற்கண்ட காய்கறி விதைகள் வழங்கப்பட்டன என, தோட்டக்கலை துறையினர் தெரிவித்தனர்.
source : Dinamalar
No comments:
Post a Comment