உத்தரகோசமங்கை அருகே களரி, சுமைதாங்கி, கீழச்சீத்தை உள்ளிட்ட பகுதிகளில் கத்தரிக்காய், சின்ன வெங்காயம், மல்லி, குண்டு மிளகாய் அதிகளவு சாகுபடி செய்ய பட்டுள்ளது. தற்போது இவை அறுவடையாகி வருகிறது. இவற்றில் சுமைதாங்கி கத்தரிக் காய்க்கு சுவை அதிகம் என்பதால் வாடிக்கையாளர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. கத்தரிச் செடிகளுக்கு தழை, மாட்டு சாணம், வேப்பம் புண்ணாக்கு உள்ளிட்ட இயற்கை உரங்களை மட்டுமே இடுகின்றனர். சுமைதாங்கி விவசாயி கார்மேகம் கூறுகையில்,"" விவசாய நிலங்களில் ஆட்டுக்கிடை அமைத்த பின், நிலத்தை நன்கு உழுது மாட்டுச் சாணம், வேப்பம் புண்ணாக்கு, தழை, சாம்பல் ஆகிய இயற்கை உரங்களை நன்கு தூவி மக்கச் செய்வோம். குறிப்பிட்ட இடைவெளிக்கு பின் பயிர்களை சாகுபடி செய்வதால் அவை பூச்சி, நோய் தாக்குதல் இன்றி செழிப்பாக வளரும். இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விளைவிக்கப்படும் கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் எதுவாக இருந்தாலும் சுவை அதிகமாக இருக்கும்,''என்றார்.
Source : Dinamalar
Source : Dinamalar
No comments:
Post a Comment