கூடலூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என அனைத்து நல விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூடலூர் அனைத்து நல விவசாயிகள் சங்க கூட்டம் துணைத்தலைவர் செங்குட்டுவன் தலைமையில், துணைச்செயலாளர் வீருபாப்பு, பொருளாளர் சங்கப்பன் முன்னிலையில் நடந்தது. சங்க கட்டடத்திற்கு இடம் வாங்குவது, நெல் கொள்முதல் நிலையம் உடனடியாக அமைக்க கோருவது, கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Source : Dinamalar
Source : Dinamalar
No comments:
Post a Comment