நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவம் என்ற தலைப்பில், வரும், 23ம் தேதி, நாமக்கல்லில் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. இதுகுறித்து, மூலிகை ஆராய்ச்சி மையத் தலைவர் கோபாலகிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள, கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையத்தில், வரும், 23ம் தேதி, மதியம், 1.30 மணிக்கு, 'நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவத்தின் முக்கியம்' என்ற தலைப்பில், இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. நாட்டுக்கோழி வளர்ப்போர் முன்பதிவு செய்து கொண்டு இந்த பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
source : Dinamalar
source : Dinamalar
No comments:
Post a Comment