ரெட்டியார்சத்திரம் பகுதியில் முதற்கட்ட மக்காச்சோள சாகுபடி இறுதி நிலையை எட்டியுள்ள சூழலில், கடந்தாண்டைவிட கணிசமான லாபம் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் அழகுபட்டி, சில்வார்பட்டி, முத்தனம்பட்டி, வெயிலடிச்சான்பட்டி, குட்டத்துப்பட்டி, கசவனம்பட்டி, குரும்பபட்டி, டி.பண்ணைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி நடக்கிறது.
பருவநிலை மாற்றம், சமீபத்திய மழை போன்றவற்றால் கடந்தாண்டைவிட மக்காச்சோள சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்தது. இருப்பினும் கணிசமான அளவில் மகசூல், கடந்தாண்டைவிட அதிக விலை போன்றவற்றால் தற்போது விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக மூடை ஆயிரத்து 450 ரூபாய் வரை விற்பனையானது. பரவலாக மக்காச்சோள அறுவடை, சில வாரங்களாக மும்முரமாக நடந்தது. வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட இயந்திரங்கள் மூலம் விவசாயிகள் மட்டுமின்றி இடைத்தரகர்களுக்கும் ஓரளவு லாபம் கிடைத்தது.
முதற்கட்ட சாகுபடியில் அறுவடை முடிந்த நிலையில், எஞ்சிய சோளத்தட்டைகளை கால்நடை தீவனத்திற்காக பலர் சேகரித்து வைத்துள்ளனர். இதற்கு பின்னரும் நிலத்தில் விடுபட்டிருந்த தீவனங்களை, ஆடு, மாடுகளைக்கொண்டு மேய்ச்சலால் அப்புறப்படுத்தினர்.
தற்போது பல விவசாயிகள் அடுத்தகட்ட சாகுபடிக்காக, நிலத்தை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலர், மீண்டும் மக்காச்சோளத்தையே பயிரிட முடிவு செய்துள்ளனர்.
Source : Dinamalar

No comments:
Post a Comment