Monday, February 15, 2016

தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி

ஊட்டி தோட்டக்கலைத்துறை வட்டார வேளாண்மை விாிவாக்க சீரமைப்பு திட்டம், 2015-16 வேளாண்மை விாிவாக்க இயக்கம் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு தோட்டக்கலையில் புதிய தொழில் நுட்பங்கள் விவசாயிகளுக்கு சென்றடைந்து உற்பத்தியினை இருமடங்காக அதிகாித்து வருமானத்தை மும்மடங்காக பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மாவட்ட அளவில் விவசாயிகளுக்கான பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. முத்தோரை மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கழிவு மேலாண்மை தொழில்நுட்பம் குறித்தும், கூடலூர் மாங்கோடு கிராமத்தில் ஜீரோ பட்ஜெட் பண்ணையம் குறித்த பயிற்சி, தங்காடு கிராமத்தில் தேயிலையில் இயந்திர அறுவடை மற்றும் கவாத்து குறித்து தொழில்நுட்ப பயிற்சி, குன்னூர் உபாசி வேளாண் அறிவியல் நிலையத்தில் தேயிலையில் சில்வர் டிப்ஸ் உற்பத்தி, கையினால் தயாரிக்கப்படும் தேயிலை தூள், தேயிலையில் மதிப்பு கூட்டிய பொருட்கள் தயாாிப்பு தொழில்நுட்பம் என்பன உள்ளிட்ட பயிற்சிகள் தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு நடத்தப்பட்டது.  மாயாரில் ஏற்றுமதி காய்கறி உற்பத்தி தொழில்நுட்பம் குறித்த பயிற்சி, மசினகுடி கிராமத்தில் புறக்கடையில் நாட்டுகோழி வளர்ப்பு முறை, பி.மணியட்டி கிராமத்தில் காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் கட்டுப்பாடு குறித்த பயிற்சி, சிங்காரா கிராமத்தில் வெள்ளாடு வளர்ப்பு குறித்த பயிற்சி, சோலாடா கிராமத்தில் காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் கட்டுப்பாடு குறித்த பயிற்சி, கல்லக்கொரை ஆடாவில் நுண்ணீா் பாசனம் மற்றும் பராமரிப்பு தொழில்நுட்பம் குறித்த பயிற்சி, லவ்டேல் பாரணி கிராமத்தில் பால் பண்ணையம் குறித்த பயிற்சி, அப்புக்கோடு கிராமத்தில் மொட்டு காளான் உற்பத்தி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து தாம்பட்டி கிராமத்தில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு குறித்த பயிற்சிகளும் விவசாயிகளுக்கு பல்துறை வல்லுனர்கள் மூலம் நடத்தப்பட்டது. 15 நாட்கள் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரம்யா மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஜான்போஸ்கோ, அஸ்வினி ஆகியோர் செய்திருந்தனா்.

Source : Dinakaran

No comments:

Post a Comment