Friday, February 12, 2016

சொட்டுநீர் பாசனத்துக்கு மானியம் விவசாயிகளுக்கு வேண்டுகோள்


சொட்டுநீர் பாசனத்துக்கு மானியம் பெற வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலரை அணுகுமாறு விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் தட்சிணாமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறையின் மூலம் சிறு, குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்துத் தரப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு தனியாக பெறப்பட்டுள்ளது. இதில், 5 ஏக்கர் வரை நிலம் உள்ளவர்களுக்கு முழு மானியத்துடன் கூடிய சொட்டுநீர் பாசன கருவிகளும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு 75 சதவீதம் மானியத்தில் கருவிகள் வழங்கப்படுகிறது. எனவே, விருப்பமுள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தின் சிட்டா, அடங்கல், சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்று, ரேஷன் கார்டு நகல், நிலவரைபடம் போன்றவற்றுடன் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலரை அணுகலாம்.


Source : Dinakaran

No comments:

Post a Comment