"துவரை பயிரை தாக்கும் வாடல் நோயை கட்டுப்படுத்த' திண்டுக்கல் வேளாண் இணை இயக்குனர் சம்பத்குமார் ஆலோசனை வழங்கினார்.
அவர் தெரிவித்ததாவது: துவரையில் "பியூசேரியம் உடம்' என்ற வாடல் நோய் எல்லா பருவங்களி<லும் ஏற்படும். இளஞ்செடிகள் பாதிக்கப்பட்டால் இலைகள் மஞ்சளாகவும், பழுப்பாகவும் மாறுவதுடன் அதன்காம்புகளின் மீது பழுப்பு வளையம் ஏற்படும்.
வளர்ந்த செடியில் நோய் தாக்குதல் இருந்தால் இலைகள் மஞ்சளாக மாறி, பின் வாடிவிடும். வாடிய செடிகளை பிடுங்கி பார்த்தால் வேர்கள் வளர்ச்சி குன்றி காணப்படும்.
பட்டையை உரித்தால் உட்புறத்தில் மண் நிறத்தில் கீற்றுகள் தென்படும். வெண்மை நிற பூசன வளர்ச்சி நோய் முற்றிய நிலையில் தண்டின் அடிப்பாகத்தில் தென்படும்.
செடிக்கு எடுத்துச் செல்லப்படும் உணவு சத்துக்கள் மற்றும் நீர் ஆகியவை வேர்ப்பாகத்திலிருந்து மேல் நோக்கி எடுத்து செல்வது தடைபடுகிறது.
இதுவே வாடல் நோய் ஏற்பட காரணமாகிறது. மண்ணின் கார அமில நிலை 7.6 முதல் 8.0 வரை இருக்கும் போது இந்நோய் அதிகமாக தோன்றும் இயல்புடையது.நோய் கட்டுப்பாடு: நோயை கட்டுப்படுத்த, டிரைக்கோடெர்மா விரிடி டால்கம் பவுடர் 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 10 கிராம் அல்லது ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் போட வேண்டும்.
சூடோமோனாஸ் புளுரசன்ஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடியை(2.5 கிலோ/எக்டேர்) 50 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மணலில் கலந்து விதைத்த 30 நாட்கள் கழித்து இட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட இடத்தில் கார்பன்டாசிம் ஒரு கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும், என்றார்.
Source : Dinamalar
No comments:
Post a Comment