Wednesday, February 17, 2016

மானியத்தில் எள் விதை விநியோகம்

அண்ணாகிராமம் வேளாண்மை உதவி இயக்குநர் சீ.இளவரசன்  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  அண்ணாகிராமம் வட்டாரத்தில் நடப்பு மாசி பட்டத்துக்கேற்ற எள் விதைகள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.இதில், 80 முதல் 85 நாள்கள் வரை வயதுடைய டி.எம்.வி-3 ரக சான்று பெற்ற விதைகளுக்கு, விதை கிராமத் திட்டத்தின் கீழ் ஒரு கிலோவுக்கு ரூ.12 மானியம் வழங்கப்படுகிறது. எனவே, அண்ணாகிராமம் வட்டாரத்துக்கு உள்பட்ட கிராமங்களில் எள் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள், அண்ணாகிராமம் மற்றும் புதுப்பேட்டை வேளாண்மை விரிவாக்க மையங்களில் டி.எம்.வி-3 ரக எள் விதைகளை மானிய விலையில் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Source : Dinamani

No comments:

Post a Comment