நீடாமங்கலத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் ஆயிரம் டன் பொதுரக நெல் செவ்வாய்க்கிழமை திருநெல்வேலிக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
நீடாமங்கலம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரம் டன் நெல் மூட்டைகள், 84 லாரிகள் மூலம் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டது.
பின்னர் அவை 70 சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் ரயிலின் 28 பெட்டிகளில் ஏற்றப்பட்டு அரவைக்காக திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
source : Dinamani
No comments:
Post a Comment