வேளாண் கருவிகள் வாங்க விவசாயிகளுக்கு உதவத் திட்டமிட்டுள்ளோம் என்று மேக்மா பின்கார்ப் நிறுவன துணைத் தலைவர் தைபஷீஷ் பட்டாச்சார்யா தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் பெரும் நகரங்களில் உள்ள தொழில்சாலைகள், பெரும் நிறுவனங்களுக்குக் கடன் கொடுக்க முன் வருகின்றனர். ஆனால் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் உள்ளவர்களுக்கோ, கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கோ கடன் வழங்க பின்வாங்குகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு டிராக்டர் உள்ளிட்ட வேளாண் கருவிகள் வாங்குவதற்கு உதவ எங்கள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் அதிக அளவில் டிராக்டர் வாங்க கடன் வழங்கினோம். இந்த நிதியாண்டிலும் அதில் அதிகம் கவனம் செலுத்துவோம் என்றார்.
கடந்த நிதியாண்டில் தமிழகத்தில் வறட்சி, மின் பற்றாக்குறை இருந்ததால் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதனை நிறுத்தி வைத்திருந்தோம். இந்த ஆண்டில் தமிழகத்தில் விவசாயிகள் உள்ளிட்டோருக்குக் கடன் வழங்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
Source : Dinamani
No comments:
Post a Comment