வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.19) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விவசாயிகள் குறைதீர் கூட்டம், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.19) நடைபெறுகிறது.
இதில், அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். மேலும், கடந்த மாதம் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட இருப்பதால் விவசாயிகள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : dinamani
No comments:
Post a Comment