அரச்சலூரை அடுத்த, ஓடா நிலையை சேர்ந்தவர் நடராஜ். இவருக்கு வெள்ளோடு காரைவாய்கால் பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. ஒரு ஏக்கரில் பூசணி பயிரிட்டு இருந்தார். இதில் காய்கள் காய்க்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் ஒரு காய் வழக்கத்துக்கு மாறாக மிகப் பெரியதாக இருந்தது. அறுவடை செய்து எடை போட்டு பார்த்ததில், 24 கிலோ, 690 கிராம் இருந்தது. அதிசய பூசணிக்காயை அக்கம்பக்கத்தினர் ஆச்சர்யத்துடன் வந்து பார்த்து சென்றனர். அசந்து போன நடராஜும், பூசணிக்காயை விற்பனை செய்வதில்லை என தீர்மானித்து, ஏதேனும் ஒரு கோவிலுக்கு தானமாக வழங்க முடிவு செய்துள்ளார்.
Source : Dinamalar
No comments:
Post a Comment