விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டதும், கண் எரிச்சல், மாலைக்கண் போன்ற கண் நோய்களை தீர்க்க கூடியதும், ஒவ்வாமைக்கு மருந்தாக விளங்குவதும், நெறிக்கட்டிகளை சரிசெய்ய கூடியதுமான வாகை மரத்தின் சிறப்புகள் பற்றி தெரியுமா?
.மருத்துவ குணங்களை கொண்ட வாகை, நிழல் தரும் மரமாக பயன்பட்டு வருகிறது. இதன் பூக்கள் மிகவும் அழகாக இருப்பதுடன் நல்ல மணமுடையது. வாகை மரத்தின் இலைகள், காய்கள், மரப்பட்டை, விதைகள் ஆகியவை பல்வேறு பயன்களை தருகிறது. வாகை இலைகளை பயன்படுத்தி கண் நோய்களுக்கான தேனீர் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: வாகை இலை, சீரகம், பனங்கற்கண்டு. ஒருபிடி வாகை இலையுடன், அரை ஸ்பூன் சீரகம், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்தால் கண்கள் பலப்படும். பார்வை நன்றாக தெரியும். மாலைக்கண் நோய்க்கு மருந்தாகிறது. கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை, நீர் வடிதல் பிரச்னைகள் சரியாகும்.வாகை இலைகளை கொண்டு கண் நோய்க்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.
ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில் வாகை இலைகளை வதக்கி எடுக்கவும். சூடு ஆறிய பின்னர் கண்களில் வைத்து துணியால் சிறிது நேரம் கட்டி வைத்தால் கண் வலி, வீக்கம் சரியாகும். கண் எரிச்சல் போகும். வாகை மரத்தின் பூக்களை பயன்படுத்தி விஷமுறிவுக்கான மருந்து தயாரிக்கலாம்.தேவையான பொருட்கள்: வாகை பூக்கள், மிளகு, தேன். ஒன்று அல்லது இரண்டு பூக்கள் எடுக்கவும். பூக்கள் கிடைக்கவில்லை என்றால் மொட்டுக்களை பயன்படுத்தலாம்.
இதனுடன் 10 மிளகை பொடி செய்து சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி எடுத்து தேன் சேர்த்து குடித்தால் கை, கால் குடைச்சல் சரியாகும். விஷம் முறியும். நாய், எலி, தேள், பாம்பு கடிக்கு மருந்தாகிறது. வாகை மரத்தின் விதைகளை பயன்படுத்தி நெறிக்கட்டிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விதைகள், மிளகு, பனங்கற்கண்டு. வாகை மரத்தின் காய்கள் பட்டையாக இருக்கும். இதனுள் இருக்கும் விதைகளை எடுத்துக் கொள்ளவும். 5 முதல் 10 விதைகள், 10 மிளகு சேர்த்து நசுக்கி எடுக்கவும்.
இதனுடன் ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டுசேர்த்து குடித்தால் கழுத்து, தொடை பகுதிகளில் ஏற்படும் நெறிக்கட்டி சரியாகும். வாகை மரத்தின் விதைகள் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. நோய் நீக்கியாக பயன்படுகிறது. வீக்கத்தை கரைப்பதுடன் வலியை போக்குகிறது. மருத்துவ குணங்களை கொண்ட வாகை, ஒவ்வாமைக்கு மருந்தாகிறது. நெறிக்கட்டு மற்றும் அதனால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்துகிறது. ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி கொழுப்பை குறைக்கிறது. இதயத்துக்கு பலம் தரக்கூடியதாக உள்ளது.
Source : Dinakaran
No comments:
Post a Comment