தோட்டக்கலைத்துறை மூலம் காளான் வளர்ப்புக்கு 40 சதவீதம் மானியம் அளிக்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி காளான் வளர்ப்பில் ஈடுபட்டு பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட தோடக்கலைத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்க திட்டத்தின் கீழ் காய்கறி, வாசனை பயிர்கள், பயிர் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பழம் மற்றும் காய்கறி சாகுபடி செய்தல், இயந்திரமயமாக்குதல், பயிற்சி வழங்குதல் மற்றும் அறுவடைக்கு பின் நேர்த்தி செய்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக இந்த ஆண்டு ரூ.4 கோடியே 91 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. நீலகிாி மாவட்ட தோட்டக்கலைத்துறை மூலம் காளான் வளர்ப்புக்கு 40 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. நடப்பாண்டு நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரியில் பாண்டியன் பார்க் மற்றும் வெஸ்ட்புரூக் ஆகிய இரு இடங்களில் விவசாயிகள் காளான் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். பாண்டியன் பார்க் பகுதியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம் ரூ.40 லட்சம் செலவில் காளான் வளர்ப்பு கூடம் அமைத்துள்ளார். இதனை மாவட்ட கலெக்டர் சங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்விற்கு பின் மாவட்ட கலெக்டர் சங்கர் கூறுகையில்: நீலகிரி மாவட்டத்தில் காளான் உற்பத்தி செய்ய ஏற்ற காலநிலை உள்ளது. இதனால், காளான் உற்பத்தி அதிகரிக்க தேசிய தோட்டக்கலை வளர்ச்சி இயக்க திட்டத்தின் கீழ் காளான் உற்பத்தி கூடம் அமைக்க விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. கோத்தகிரி வெஸ்ட்புரூக் பகுதியில் இந்த விவசாயிக்கு ரூ.16 லட்சம் மானியம் அளிக்கப்பட்டுள்ளது. சாகுபடி செலவு ஆகியவை போக ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரை லாபம் கிடைக்கும். இந்தாண்டு இரு விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் காளான் வளர்ப்பு திட்டம் மூலம் ரூ. 32 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதே போல் மலர் சாகுபடிக்கு பசுமை குடில் அமைக்க ஒரு சதுர மீட்டருக்கு ரூ.467.5 வழங்கப்படுகிறது. ஒரு விவசாயி அதிகபட்சமாக 4000 ஆயிரம் சதுர மீட்டர் பசுமை குடில் அமைக்கலாம். 4000 சதுர மீட்டருக்கு ரூ.16.8 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. மலர் சாகுபடியின் கீழ் ஆசியட்டிக் மற்றும் ஓரியண்டல் லில்லி ஆகிய கொய்மலர் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இந்த கொய்மலர் ஒன்றுக்கு ரூ.40 வரை விலை கிடைக்கிறது. மலர் சாகுபடியை தொழில்முறையில் செய்தால் விவசாயிகள் லாபம் பெறலாம். நடப்பாண்டில் நீலகிரி மாவட்டத்தில் ரூ.3.26 ேகாடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது தோட்டக்கலை இணை இயக்குநர் மணி, உதவி இயக்குநர் உமாராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Source : dinakaran
Source : dinakaran
No comments:
Post a Comment