Tuesday, February 2, 2016

433 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

சம்பா, தாளடி நெற்பயிர்களை சாகுபடி செய்ய திருவாரூர் மாவட்டத்தில் 433 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மதிவாணன் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள சித்தாம்பூரில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள சம்பா நெல் வயல்களை கலெக்டர் மதிவாணன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருவாரூர் மாவட்டத்தில் இயல்பாக சம்பா 1,48,817 எக்ேடர், தாளடி 27,525 எக்டேர் என மொத்தம் 1,36,342 எக்ேடரில் சாகுபடி செய்யப்படும். நடப்பாண்டில் சம்பா 1,20,156 எக்ேடர், தாளடி 28,688 எக்டேர் என மொத்தம் 1,48,844 எக்ேடரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. வேளாண்மைதுறை அலுவலர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்களை தொடர்ந்து கண்காணித்து அவ்வபோது ஏற்படும் பூச்சிநோய் தாக்குதலுக்கு தகுந்த பாதுகாப்பு முறை பற்றி தெரிவித்ததால் பூச்சிநோய் தாக்குதல் பெருமளவில் ஏற்படவில்லை. தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்களும் அறுவடைக்கு தயாராகிவிட்டன. சம்பா மற்றும் தாளடி நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இல்லை. இதற்கென வேளாண்மைத்துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி கிராமம்தோறும் இயக்கங்கள் நடத்தி தற்சமயம் 90 சதம் சம்பா பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் தொடர்ந்து அறுவடை செய்யப்பட்டு வருகிறது. சம்பா, தாளடி நெல்லை கொள்முதல் செய்ய மாவட்டத்தில் 433 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். வேளாண்மை இணை இயக்குனர் மயில்வாகணன், நீடாமங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் மீனா உடனிருந்தனர்.

Source : Dinakaran

No comments:

Post a Comment