6:13
கோபி: கோபி காய்கறி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்த, 20 கிலோ எடை சர்க்கரை பூசணியை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர். கோபி மார்க்கெட் வீதியை சேர்ந்தவர் சின்னபாப்பா. காய்கறி வியாபாரி; பல்வேறு இடங்களில் இருந்து வாங்கி வந்து வியாபாரம் செய்கிறார். கடையில், 20 கிலோ எடை கொண்ட சர்க்கரை பூசணிக்காயை நேற்று விற்பனைக்கு வைத்திருந்தார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இருந்த இதை வாங்கி வந்துள்ளார். இதே எடையில் மொத்தம், மூன்று காய்களை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதை மக்கள் பார்த்து வியந்தனர்.
Source : Dinamalar
No comments:
Post a Comment