Tuesday, February 2, 2016

உணவு பூங்கா அமைக்கலாமா

மதுரை அரசரடியில் உள்ள தமிழ்நாடு தொழில் முனைவு மேம்பாட்டு மையம் விவசாயிகளுக்கு வழிகாட்ட வேளாண் வணிகப் பிரிவை துவக்கியுள்ளது.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகரைச் சேர்ந்த 100 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை, சேமிப்பு கிடங்கு மற்றும் உணவு பூங்கா அமைக்க உள்ளது. இதுகுறித்து வணிகப்பிரிவு ஆலோசகர் ராஜகோபால் கூறியது:
விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவேண்டும்; அவற்றை மதிப்பு கூட்டிய பொருட்களாக்கி சந்தைப்படுத்த வேண்டும்; தொழில்நுட்ப ரீதியாக முன்னேற வேண்டும். விவசாயிகளுக்கான இப்போதைய தேவை இவை தான். மத்திய அரசின் உணவு 
பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் உணவு பூங்கா அமைக்க ரூ.50 கோடி மானியம் தருகிறது. விவசாயிகள் ஆங்காங்கே பயிரிடுகின்றனர். பொது சேவை மையம் அமைத்து விளைபொருட்களை மதிப்பு கூட்டி உணவு பூங்கா மூலம் விற்பனை செய்யலாம். இதை தனிநபர்களால் செய்ய முடியாது. ஆறு மாவட்டங்களில் காய்கறி, பழங்களுக்கான உணவு பூங்கா அமைக்கலாம். முதலில் அறுவடை நேர்த்தியை கடைப்பிடிக்க வேண்டும். வாழை என்றால் மொத்த தாராக வெட்டுகின்றனர். சீப்பு சீப்பாக வெட்டி பதப்படுத்தும் மையத்திற்கு கொண்டு வந்து பவுடர், சிப்ஸ் தயாரிக்கலாம். 
100 விவசாயிகள் ஒன்று சேர்ந்தால் உணவு பூங்கா அமைக்கலாம். விவசாயம் சார்ந்த அனைத்து ஆலோசனைகளும் வழங்க தயாராக உள்ளோம், என்றார். தொடர்புக்கு 94429 70118.

Source : Dinamalar

No comments:

Post a Comment